கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில் கோவை மாநகர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

ஜூன்3ம் தேதி முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு, இரத்ததானம் முகாம், மருத்துவ முகாம், மரக்கன்று நடுதல், உள்ளூர் மைதானங்களில் விளையாட்டுப் போட்டி என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



கோவை: கோவை வடகோவை, கிராஸ்கட் சாலையில் உள்ள கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில், முத்தமிழறிஞர் செம்மொழிக் காவலர் தலைவர் கலைஞரின் நூற்றாண்டு விழா வருகிற ஜூன் (03.06.2024) அன்று நடைபெறுவதை முன்னிட்டு, கோவை மாநகர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம், கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் ex.எம்எல்ஏ., தலைமையில் நேற்று (மே.27) நடைபெற்றது.



இந்த செயற்குழு கூட்டத்தில், கோவை மாநகர் மாவட்டதுணைச் செயலாளர்கள் கோட்டை அப்பாஸ், கல்பனா செந்தில், மாநகர் மாவட்ட பொருளாளர் எஸ்.எம்.பி.முருகன், கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்த், தலைமைக் கழக நிர்வாகிகள்‌ பி.நாச்சிமுத்து, கே.எம்.தண்டபாணி, பி.ஆர்.அருள்மொழி, மு.இரா.செல்வராஜ், நா.முருகவேல், à®….தமிழ்மறை, தமிழ்செல்வன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் டி.எஸ்.பி.கண்ணப்பன், வே.பாலசுப்பிரமணியன், ஆனந்தகுமார், சிங்காநல்லூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர், கழக மாநில சுற்றுச்சூழல் அணி செயலாளர் மணிசுந்தர், பொதுக்குழு உறுப்பினர்கள் மு.மா.ச.முருகன், மா.மகுடபதி, இரா.மணிகண்டன், ச.குப்புசாமி, ஆடிட்டர் வெ.சசிகுமார், சரஸ்வதி புஷ்பராஜ், பகுதிச் செயலாளர்கள் ஆர்.எம்.சேதுராமன், ப.பசுபதி, சிங்கை மு.சிவா, துரை.செந்தமிழ்செல்வன், மா.நாகராஜ், இரா.சேரலாதன், மார்க்கெட் எம்.மனோகரன், வி.ஐ.பதுருதீன், கணபதி லோகு, அஞ்சுகம் பழனியப்பன், வ.à®®.சண்முகசுந்தரம், பரணி கே.பாக்கியராஜ், கே.எம்.ரவி, எ.எம்.கிருஷ்ணராஜ், கோவை மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மெட்டல் ராஜாமணி, கோவை மாநகராட்சி மேற்கு மண்டல தலைவர் தெய்வயானை தமிழ்மறை, கோவை மாநகராட்சி நிலைக் குழு தலைவர்கள் பெ.மாரிசெல்வன், சாந்தி முருகன், வி.பி.முபசீரா, அணிகளின் அமைப்பாளர்கள் இரா.தனபால், இலா.தேவசீலன், டெம்போ சிவா, வழக்கறிஞர் அன்புச் செழியன், நா.பாபு, அக்ரி பாலு, சிவப்பிரகாஷ், கராத்தே அர்ஜூனன், வி.மணி, ஏ.எஸ்.ஜெயகுமார், ராஜ்குமார், கண்ணன், சஞ்சய், சி.ஆர்.கனிமொழி, அன்னம்மாள்‌ ex.mc, சத்யா கோவை தங்கம், வட்டக் கழகச் செயலாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



இக்கூட்டத்தில்,கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன. உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவர் முத்தமிழ் அறிஞர் செம்மொழி காவலர் தலைவர் கலைஞர் அவர்களுக்கு நூற்றாண்டு விழா. 1937 ஆம் ஆண்டு கட்டாயமாக தமிழ்நாட்டில் இந்தி மொழி திணிக்கப்பட்ட நேரத்தில், கொஞ்சு மொழி தமிழ் இருக்க,இந்தி நமக்கு எதற்கு என்று எண்ணி ஓடி வந்த இந்தி பெண்ணே கேள். நீ நாடி வந்த நாடு இதல்லவே என்று கயல்வில் புலிக்கொடி ஏந்தி ஆரூர் வீதிகளில் போர் முழக்கமிட்ட மகத்தான தலைவர் கலைஞர் அவர்கள். அன்று முதல் தமிழ் இனத்திற்காக தமிழ் மொழிக்காக தமிழர்களின் கலை, கலாச்சாரம், நாகரீகம், பண்பாட்டினை பாதுகாப்பதற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு இரவென்றும், பகல் என்றும் பாராமல் அயராமல் உழைத்த மாமனிதர் தலைவர், கலைஞர். பெண்களுக்கு சொத்தில் சம உரிமை பெற்றுக் கொடுத்தார்.



தலைவர் கலைஞருடைய ஆட்சி காலத்திலே தான் முதன்முதலாக உள்ளாட்சித் துறையில் 50 சதவீதம் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இலவச கலர் டிவி திட்டம், பிச்சைக்காரர்கள் மறுவாழ்வுத்திட்டம், கண்ணொளி திட்டம், கல்வித்துறையை இரண்டாகப் பிரித்து, உயர்கல்விக்கு என்று தனியாக ‘உயர் கல்வித்துறை’ உருவாக்கும் திட்டம், பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ், சத்துணவுத் திட்டத்தில் முட்டை சேர்ப்பு திட்டம், தமிழ் வழியில் பயின்ற 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் சிறப்புக்கட்டணங்கள் ரத்து செய்தல் திட்டம், வருமுன் காப்போம் திட்டம், அவசர கால மருத்துவ ஊர்தி 108 சேவை திட்டம்,  கர்ப்பிணி பெண்களுக்கு நிதியுதவி வழங்கும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு நிதியுதவித் திட்டம், கை ரிக்‌ஷாக்களை ஒழித்து இலவச சைக்கிள் ரிக்‌ஷாக்கள் வழங்கும் திட்டம், கொங்கு வேளாள கவுண்டர் OBC  பட்டியலில் சேர்க்கும் திட்டம், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டம், அருந்ததியர் சமூகத்தினருக்கு 3% உள் இட ஒதுக்கீடு, உருது மொழி பேசும் முஸ்லீம்கள் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தல், சமத்துவபுரம் திட்டம், அஞ்சுகம் அம்மையார் நினைவுக் கலப்புத் திருமணத் திட்டம், உழவர் சந்தை திட்டம், இலவச மின்சாரம் பெறும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்தல், அனைத்து கிராமங்களுக்கும் மின் இணைப்பு திட்டம், கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு வெற்றிகரமாக நடத்தி முடிப்பு, மே தினத்துக்கு அரசு விடுமுறை என பல திட்டங்களை கொண்டு வந்தவர்.

தலைவர் கலைஞர் சுமார் 60 ஆண்டு காலம் தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினராக பணியாற்றி இருக்கிறார். 1957ஆம் ஆண்டு குளித்தலையில் போட்டியிட்டது முதல், போட்டியிட்ட அனைத்து சட்டப்பேரவை தேர்தல்களிலும் மகத்தான வெற்றி வாகை சூடி, மக்களின் மனங்களை கவர்ந்த தலைவர் கலைஞர்.

19 ஆண்டு காலம் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பணியாற்றி இருக்கிறார். எதிர்க்கட்சித் தலைவராக பணியாற்றி இருக்கிறார். பொதுப்பணித்துறை அமைச்சராக பணியாற்றி இருக்கிறார். இந்தியாவில் பல பிரதமர்களை தேர்ந்தெடுப்பதற்கு காரணமாக இருந்திருக்கிறார்.

பல ஜனாதிபதிகளை தேர்ந்தெடுப்பதற்கு தலைவர் கலைஞர்  காரணமாக இருந்திருக்கிறார். இப்படி அரசியலில் தொடர்ந்து 1937 ஆம் ஆண்டு முதல் இன்று வரை தமிழக அரசியலில் மக்களால் பேசப்படும், புகழ்ந்து போற்றப்படும், தலைவராக திகழ்கிறார்.

தமிழ்நாடு முதலமைச்சர், கழக தலைவர், தளபதியின் ஆணைங்கிணங்க, தமிழ் உள்ளவரை தலைவர் கலைஞர் புகழ் ஓங்கட்டும்! நம் இதயத்துடிப்பாகவும், குருதி ஓட்டமாகவும் இருந்து ஒவ்வொரு நாளும் நம்மை இயக்கிக் கொண்டிருப்பவர் தலைவர் கலைஞர்.

அவர் நம்மை இயக்குவதால்தான் திராவிட முன்னேற்றக் கழகம் எனும் அரசியல் பேரியக்கத்தை நம்மால் அவர் வகுத்துத் தந்த பாதையில் வெற்றிகரமாக இயக்க முடிகிறது.  தேர்தல் நடத்தை முறைகளைக் கவனத்தில் கொண்டு, கலைஞர் நூற்றாண்டு நிறைவுறும் இந்த ஜூன்-3 அன்று மக்கள் கூடும் இடங்களில் முத்தமிழறிஞர் கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மாலையிட்டு, அனைத்துக் கொடிக்கம்பங்களிலும் கொடிகளைப் புதுப்பித்துக் கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி, மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்குதல், கழகத்தினர் தங்கள் இல்லங்களுக்கு முன்பாக ‘கலைஞர் 100’ என்ற வரியுடன் கோலமிட்டு முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்தநாளைக் கொண்டாடுதல், இரத்ததான முகாம்கள், மருத்துவ முகாம்கள் நடத்துதல், மரக்கன்றுகளை நடுதல் எனவும், உள்ளூர் மைதானங்களில் இளைஞர்கள், பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகளை நடத்திப் பரிசுகளை வழங்குவது என மிகச்சிறப்பான முறையில் நடத்த வேண்டும் என்று  கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முடிவில்‌ மாநகர் மாவட்ட திமுக துணை செயலாளர் கல்பனா செந்தில் நன்றி கூறினார். 

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...