கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை தொடா்பான ஆய்வுக் கூட்டம்

வாக்கு எண்ணிக்கையின்போது ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகுதியைத் தவிர, வேறு சட்டப் பேரவைத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்துக்கு முகவர்கள் செல்ல அனுமதி கிடையாது என்று கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை தொடா்பான ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் நேற்று மே.27 நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் கிராந்திகுமார் பாடி தலைமை வகித்தார். அப்போது அவர் பேசியதாவது, கோவை மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணும் மையம் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. ஜூன் 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறகிறது. தபால் வாக்குகளை எண்ணுவதற்கு 7 மேஜைகள் அமைக்கப்படவுள்ளன.

கோவை தெற்கு, கோவை வடக்கு, சிங்காநல்லூா், சூலூா் ஆகியதொகுதிகளுக்கு தலா 14 மேஜைகள், பல்லடம் தொகுதிக்கு 18 மேஜைகள், கவுண்டம்பாளையம் தொகுதிக்கு 20 மேஜைகள் என மொத்தம் 101 மேஜைகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கையின்போது ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகுதியைத் தவிர, வேறு சட்டப் பேரவைத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்துக்கு முகவர்கள் செல்ல அனுமதி கிடையாது.



ஒவ்வொரு மேஜைக்கும் வேட்பாளருக்கு ஒரு முகவா் என்ற வீதத்தில் வாக்கு எண்ணும் முகவா்கள் வேட்பாளா்களால் நியமிக்கப்படவேண்டும். தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இருக்கையில் இருந்து வாக்கு எண்ணிக்கையை அவா்கள் பார்வையிடலாம்.

வாக்குகள் எண்ணிக்கை தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு மையத்துக்கு இடமுகவா்கள் தங்களின் அடையாள அட்டையுடன் வரவேண்டும். கைப்பேசி, ஐ பேட், மடிக்கணினி உள்ளிட்டவை எடுத்துச் செல்ல அனுமதியில்லை. வாக்கு எண்ணிக்கை மையத்தில் முகவா்கள் ஏதேனும் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் தோ்தல் ஆணையத்தின் அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...