பிள்ளையார்புரத்தில் 5000 மரக்கன்றுகள் நட கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு பொதுமக்களுக்கு அழைப்பு

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, வரும் ஜூன் 1ஆம் தேதி, பிள்ளையார்புரத்தில் 5,000 மரக்கன்றுகள் நடவுள்ளோம். இதில் விருப்பம் உள்ள பொதுமக்கள் பங்கேற்கலாம் என்று கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.


கோவை: கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் அண்மையில் வெளியிட்டுள்ள காணொளியில், மழைக்காலம் துவங்கியிருக்கிறது. இது, மரக்கன்றுகளை நடுவதற்கு நல்ல வாய்ப்பு. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, மதுக்கரை வனச்சரகத்துக்கு உட்பட்ட பிள்ளையார்புரம் பகுதியில் 27 ஏக்கர் நிலத்தில் மரக்கன்றுகள் நட முடிவு செய்துள்ளோம். வனத்துறை அனுமதி பெற்று, நிலத்தை பண்படுத்தி வைத்துள்ளோம்.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, வரும் ஜூன் 1ஆம் தேதி, பிள்ளையார்புரத்தில் 5,000 மரக்கன்றுகள் நடவுள்ளோம். பொதுமக்கள் பங்கேற்கலாம்.

வாய்ப்பு இருப்போர், மண்வெட்டி உள்ளிட்ட உபகரணங்களைக் கொண்டு வரலாம். இல்லாவிட்டாலும் இங்கேயே ஏற்பாடு செய்யப்படும். பசுமை காக்கும் முயற்சியில் கரம் கோர்க்க விரும்புவோர் இணையலாம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...