கோவை காந்திபுரம் கிராஸ்கட் சிக்னலில் இலவசமாக ஹெல்மெட் வழங்கி வாகன ஓட்டிகளுக்கு காவல்துறை விழிப்புணர்வு

காந்திபுரம் கிராஸ்கட் சிக்னலில் ஹெல்மெட் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக ஹெல்மெட் வழங்கி, ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


கோவை: இருசக்கர வாகனங்களில் பயணிப்போர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். இதனை கோவை மாநகர போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். ஹெல்மெட் அணியாமல் பயணிப்போருக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

இதனிடையே காந்திபுரம் கிராஸ்கட் சிக்னலில் போக்குவரத்து காவல்துறை எஸ்.ஐ கார்த்திக், டிராபிக் வார்டன் பிரபு மற்றும் போக்குவரத்து காவலர்கள் ஆகியோர் இன்று (மே.28) வாகன தணிக்கை நடத்தினர்.



அப்போது ஹெல்மெட் அணிவதன் அவசியத்தைஎடுத்துக்கூறி இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களுக்கு அறிவுரை வழங்கி அவர்களுக்கு இலவசமாக தலைக்கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...