முதலமைச்சர் தலையிட்டு ஆவின் நிர்வாகத்தை சீரமைக்க வேண்டும் - சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கோரிக்கை

கோபிசெட்டிபாளையம் பகுதியில் காலாவதியான ஆவின் பிஸ்கட்டுகள் விற்பனை செய்யப்பட்டு இருப்பது, ஆவின் மீதான மக்களின் நம்பிக்கையை தகர்க்கிறது. நம்பி வாங்கும் பொது மக்களுக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய துரோகம் இது என்று சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று மே.28 வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம் பேருந்து நிலையத்தில் உள்ள ஆவின் பாலகம், சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்துச் செல்லும் கொடிவேரி அணை பகுதியில் உள்ள ஆவின் பாலகம் உள்ளிட்ட பாலகங்களுக்கு, ஈரோடு மாவட்டம், சித்தோடு ஆவின் தலைமை அலுவலகத்தில் இருந்து ஆவின் பிஸ்கட்டுகள் விற்பனைக்காக அனுப்பப்பட்டு வருகிறது.

கொடிவேரி அணை ஆவின் பாலகம் உள்ளிட்ட பாலகங்களில், காலாவதியான பிஸ்கட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக 'கொடிவேரி அணை-பவானி நதி பாசன விவசாயிகள் சங்கத்தின்' நிர்வாகிகளுக்கு தெரியவந்துள்ளது.

அதைத் தொடர்ந்து மாவட்ட உணவு கட்டுபாட்டு அலுவலர் மற்றும் ஈரோடு மாவட்ட ஆட்சியருக்கு இணைய வழியில் விவசாய சங்கத்தினர் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் சித்தோடு ஆவின் தலைமை அலுவலகத்தில் இருந்து பிஸ்கட்டுகளை ஏற்றி வந்த, TN43 D7390 ஆவின் வாகனத்தை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அந்த வாகனத்திலிருந்து காலாவதியான பிஸ்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அதைத் தொடர்ந்து, சித்தோடு ஆவின் சேமிப்பு கிடங்கில் இருந்த காலாவதியான 6 டன் பிஸ்கட் பாக்கெட்டுகளை, பவுடர் பாயிண்ட் எனப்படும் இடத்திற்கு மாற்றிவிட்டு, சேமிப்பு கிடங்கில் புதிய பிஸ்கட் பாக்கெட்டுகளை வைக்கப்பட்டதாகவும், காலாவதியான பிஸ்கட்டுகள் அனுப்பப்பட்டது தெரியாமல் நடந்து விட்டது தவறு என்றும் ஆவின் நிர்வாகம் நாடகமாடி வருகிறது. இந்த தவறை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த, 'கொடிவேரி அணை-பவானி நதி பாசன விவசாயிகள் சங்கத்தினர்' குற்றம் சாட்டியுள்ளனர்.

தமிழகத்தில் ஆவின் நிறுவனத்திற்கு மக்களிடம் மிகவும் நல்ல பெயர் உள்ளது. ஆவின் விற்பனை செய்யும் பால், தயிர், மோர், வெண்ணெய், நெய், பன்னீர் உள்ளிட்ட பால் பொருட்களும், பிஸ்கட், இனிப்புகள் போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களும் மிகவும் தரமானவை என்று மக்கள் உறுதியாக நம்புகின்றனர். அதனால், நம்பிக்கையுடன் ஆவின் பொருள்களை வாங்கி குழந்தைகளுக்கும் கொடுக்கின்றனர்.

கோபிசெட்டிபாளையம் பகுதியில் காலாவதியான ஆவின் பிஸ்கட்டுகள் விற்பனை செய்யப்பட்டு இருப்பது, ஆவின் மீதான மக்களின் நம்பிக்கையை தகர்க்கிறது. நம்பி வாங்கும் பொது மக்களுக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய துரோகம் இது.

இதுபோன்று செயல்களால் ஆவின் நிறுவனம் மிகப்பெரிய இழப்பைச் சந்திக்கும் நிலை உருவாகும். எனவே, காலாவதியான பிஸ்கட்டுகள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் மீது, ஆவின் நிர்வாகமும், பால்வளத்துறையும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாறாக, தவறு செய்த அதிகாரிகளை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டால் ஆவின் நிறுவனத்தை யாராலும் காப்பாற்ற முடியாத நிலை உருவாகும்.

அரசால் எந்தவொரு வணிக நிறுவனத்தையும் வெற்றிகரமாக நடத்த முடியாது என்ற அவப்பெயர் மக்கள் மனதில் நிலை பெற்று விடும். எனவே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் தலையிட்டு, ஆவின் நிர்வாகத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் தொடரும் கொலை சம்பவங்கள்: ஆலாந்துறையில் பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக்கொலை

கோவை ஆலாந்துறையில் நாகராஜ் (60) என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரை போ...

இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...