கோவை அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது

மதுக்கரையில் கஞ்சா சாக்லேட்டை விற்பனைக்கு வைத்திருந்த உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த வேத்பிரகாஷ் சோன்கர் என்பவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 5 கிலோ கஞ்சா சாக்லேட்டை பறிமுதல் செய்தனர். இதேபோல், மலுமிச்சம்பட்டியில் கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு வந்த நபரும் கைது செய்யப்பட்டார்.


கோவை: கோவை மாவட்டத்தில் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அதன் அடிப்படையில், இன்று மே.28 மதுக்கரை பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்பனைக்கு வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் மதுக்கரை போலீசார், மதுக்கரை மார்க்கெட் அருகே சென்று சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அங்கு கஞ்சா சாக்லேட்டை விற்பனைக்கு வைத்திருந்த உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த அசோக் சோன்கர் மகன் வேத்பிரகாஷ் சோன்கர் (30) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 5 கிலோ கஞ்சா சாக்லேட்டை பறிமுதல் செய்தனர்.

இதேபோல், செட்டிபாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் தனிப்படை காவல்துறையினர் மலுமிச்சம்பட்டி பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு வந்த செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த மணி மகன் பிச்சை பாண்டி(23) என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரிடமிருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...