அன்னூரில் நகை வழிப்பறியில் ஈடுபட்ட நபர் கைது; 5 சவரன் தங்கம் பறிமுதல்

கோவை அன்னூரில் மளிகை கடையில் நடந்த நகை வழிப்பறியில் ஒருவர் கைது செய்யப்பட்டு, 5 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாவட்டம், அன்னூர் காவல் நிலைய பகுதியில் வசிக்கும் தனலட்சுமி(49) கடந்த 23.05.2024 ஆம் தேதி அவரது மளிகை கடையில் நின்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர் தனலட்சுமியின் மளிகை கடையில் பொருட்கள் வாங்குவது போல் வந்து அவரின் கழுத்திலிருந்த 5 சவரன் தங்கச் சங்கிலியை பறித்து சென்றுள்ளார்.

இது சம்பந்தமாக பாதிக்கப்பட்ட நபர் அன்னூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேலும் இப்புகாரில் விரைந்து நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவிட்டதன் பேரில், தனிப்படைகள் அமைக்கப்பட்டு புலன் விசாரணை செய்து குற்றவாளியை தேடி வந்த நிலையில் கோவையை சேர்ந்த சேவியர் அமல்ராஜ் மகன் பிலிப் மேத்யூ(23) என்பவர் இக்குற்றத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இந்நிலையில் தனிப்படையினர் அவரை இன்று மே.28 கைது செய்து அவரிடமிருந்து 5 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...