கோவை தனியார் மருத்துவமனை காவலாளிகள் தாக்கியதால் ஒருவர் உயிரிழப்பு..? - போலீசார் தீவிர விசாரணை

அவிநாசி சாலையில் உள்ள KMCH மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த ராஜா என்ற நபரை, அங்கு பணியில் இருந்த காவலாளிகள் திருட வந்ததாக கூறி தாக்கியதில் அவர் உயிரிழந்து விட்டதாக, குடும்பத்தார் புகார். மாநகர காவல் துணை ஆணையர் ஸ்டாலின் தலைமையில் காவல்துறை அதிகாரிகள் மருத்துவமனையில் தீவிர விசாரணை.



கோவை: கோவை காந்திமாநகர் பகுதியை சேர்ந்தவர் மணி(எ) ராஜா. இவரது மனைவி சுகன்யா. இவர்களுக்கு பள்ளி செல்கின்ற வயதில் ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.

இந்த நிலையில் கோவை அவினாசி சாலையில் உள்ள கே எம் சி ஹெச என்ற தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற ராஜாவை அங்குள்ள காவலாளிகள் மற்றும் மருத்துவமனை நிர்வாகிகள் தாக்கியதால் அவர் உயிரிழந்ததாக ராஜாவின் மனைவி சுகன்யா குற்றம் சாட்டியுள்ளார்.



இதுகுறித்து பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சுகன்யா, சிகிச்சைக்காக மருத்துவமனை செல்வதாக கூறிவிட்டு சென்ற அவரது கணவரை, மருத்துவமனை வளாகத்தில் உள்ள கம்பிகளை திருட வந்துள்ளதாக கூறி மருத்துவமனை வளாகத்தில் இருந்த காவலாளிகள் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தை சேர்ந்த சிலர் இணைந்து கடுமையாக தாக்கி உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

தாக்குதலில் மயக்கம் அடைந்த ராஜா அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், சம்பவத்திற்கு பின்னர் தான் வீட்டில் இருந்த போது போலீசார் என்று கூறி மருத்துவமனையை சேர்ந்த மூவர் தனது வீட்டிற்கு வந்து தன்னை புகைப்படம் எடுத்துக் கொண்டு சென்றதாகவும், இதன் தொடர்ச்சியாக மருத்துவமனைக்கு சென்று தனது கணவர் நிலை குறித்து கேட்டு போராடிய பின்னரே தனது கணவர் இறந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

எனவே, தாக்குதலில் ஈடுபட்ட மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராஜாவின் குடும்பத்தார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புகாரின் பேரில், மாநகர காவல் துணை ஆணையர் ஸ்டாலின் தலைமையிலான காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்டமாக, மருத்துவமனை காவலாளிகள், நிர்வாகத்தினர் என 11 பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரபல தனியார் மருத்துவமனை வளாகத்தில் வைத்து, ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...