சரவணம்பட்டியில் ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய பொறியாளருக்கு ஒரு ஆண்டு சிறை

சரவணம்பட்டியில் வீட்டின் அருகே இடையூறாக இருந்த மின்கம்பத்தை அகற்றுவதற்காக தேவராஜ் என்பவரிடம் ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய இளநிலை பொறியாளர் டி.எம்.ரவீந்திரனுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.


கோவை: கோவை சரவணம்பட்டியை சேர்ந்தவர் தேவராஜ். இவரது வீட்டின் அருகே மின்கம்பம் ஒன்று இடையூறாக இருந்தது. இதனை அகற்றக்கோரி கடந்த 2012-ம் ஆண்டு சரவணம்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றிய இளநிலை பொறியாளர் (வினியோகம்) டி.எம்.ரவீந்திரன் (வயது 60) என்பவரை சந்தித்து கோரிக்கை வைத்தார். இதற்காக அவர் கடந்த 5-7-2012-ம் ஆண்டு தேவராஜிடம் ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக தெரிகிறது.

அப்போது அங்கு மறைந்து இருந்த கோவை லஞ்ச ஒழிப்பு போலீசார் டி.எம்.ரவீந்திரனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கோவை ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் (28-05-2024) அன்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் வழக்கை நீதிபதி எஸ்.மோகனா ரம்யா விசாரித்தார். அப்போது அவர் டி.எம்.ரவீந்திரனுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் டி.எஸ்.சிவகுமார் வாதாடினார். லஞ்ச ஒழிப்பு போலீஸ் தரப்பில் போலீஸ் சூப்பிரண்டு கே.சுந்தர்ராஜ், இன்ஸ்பெக்டர் உன்னிகிருஷ்ணன் ஆகியோர் விசாரணை அதிகாரிகளாகவும், இன்ஸ்பெக்டர் பரிமளா தேவி ஒப்படைப்பு அதிகாரியாகவும் செயல்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...