கோவை தனியார் மருத்துவமனை வளாகத்தில் திருட்டில் ஈடுபட்டதாக கூறி ஒருவர் அடித்து கொலை: 8 பேர் கைது

மருத்துவமனை நிர்வாகத்தை சேர்ந்த ஒருவர் உட்பட காவலாளிகள், ஊழியர்கள் என எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் மேலும் 11 பேர் மீது கொலை உட்பட ஐந்து பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவையில் உள்ள KMCH என்ற தனியார் மருத்துவமனையில் இரும்பு பொருட்களை திருட முயன்றதாக கூறி ஒருவர் மருத்துவமனை ஊழியர்களால் தாக்கப்பட்டு, உயிரிழந்த சம்பவம், தொடர்பான வழக்கில், முதல் கட்ட விசாரணைக்கு பின்னர், மருத்துவமனை நிர்வாகத்தினர் மற்றும் ஊழியர்கள் என எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 11 பேர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பாய்ந்துள்ளது.

நேற்று முன்தினம், கோவை அவிநாசி சாலையில் உள்ள KMCH என்ற தனியார் மருத்துவமனை வளாகத்தில், இரும்பு பொருட்களை திருடன் முயன்றதாக கூறி, காந்திமாநகர் பகுதியை சேர்ந்த ராஜா என்ற நபரை மருத்துவமனை நிர்வாகத்தினர் மற்றும் காவலாளிகள் தாக்கியதில், பலத்த காயமடைந்த அவர், அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், சிகிச்சைக்காக சென்ற தனது கணவரை தனியார் மருத்துவமனை நிர்வாகத்தினர் மற்றும் ஊழியர்கள் அடித்து கொலை செய்து விட்டதாக பாதிக்கப்பட்ட ராஜா என்பவரின் மனைவி சுகன்யா பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில், சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணையை துவங்கினர். மாநகர காவல் துணை ஆணையர் ஸ்டாலின் தலைமையில் காவல்துறை அதிகாரிகள் மருத்துவமனை நிர்வாகத்தினர் மற்றும் ஊழியர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.



இந்த நிலையில், மருத்துவமனை துணைத் தலைவர் நாராயணன், தகவல் பிரிவு மேலாளர் ரமேஷ், செயலாக்கத்துறை அதிகாரி சரவணகுமார், பிஆர்ஓ சசிக்குமார், பிளம்பர் சுரேஷ் , சரவணகுமார், காவலாளி மணிகண்டன், ஸ்டோர் மேனேஜர் சதீஷ்குமார் என 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் 11 பேர் மீது கொலை உட்பட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, FIR - யில் முன்னுக்கு பின் முரணாக தகவல்கள் உள்ளதாக கூறி உடலை வாங்க மறுத்து கோவை அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை அறை முன்பு ராஜாவின் குடும்பத்தார் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர், காவல்துறையினரின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு உடலை வாங்குவதற்கு சம்பந்தம் தெரிவித்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த வழக்கில் மருத்துவமனை நிர்வாகத்தினர் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...