கோவையில் கோழியை கவ்விக் சென்ற சிறுத்தை - சிசிடிவி வீடியோ வைரல்

தடாகம் சோமையனூர் திருவள்ளுவர் நகரில் வீட்டின் அருகே மேய்ந்துக்கொண்டிருந்த கோழியை சிறுத்தை ஒன்று லாவகமாக கவ்விச்செல்லும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.


கோவை: கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தடாகம் பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் அவ்வப்போது ஊருக்குள் வந்து செல்வது வாடிக்கையாகி விட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அப்பகுதியில் கருஞ்சிறுத்தை உலா வந்ததாக வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தடாகம் சோமையனூர் திருவள்ளுவர் நகர், பழனியப்பா லேஅவுட் பகுதியைச் சேர்ந்த சக்தி என்பவரின் வீட்டின் வளர்ப்பு கோழி நேற்று அதிகாலையில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் பகுதியில் மேய்ந்து கொண்டு சத்தம் போட்டு உள்ளது.

இதனை அந்த வழியாக சென்ற சிறுத்தை, கோழி மதில் மேல் இருப்பதை கண்டு அதனை லாவகமாக கவ்விக் கொண்டு சென்று உள்ளது. உரிமையாளர் அதிகாலையில் எழுந்து பார்த்தப்போது, கோழியின் இறக்கைகள் வீட்டின் முன் கிடந்துள்ளது.



இதனையடுத்து, வீட்டில் பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, மதில் மேல் இருந்த கோழியை கவ்விக் கொண்டு சிறுத்தை செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் இது குறித்து அப்பகுதி மக்களிடம் மிகுந்த கவனமாக எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென கூறி உள்ளனர். மேலும் இது குறித்து வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அப்பகுதியில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறும் முன்பு வனத் துறையினர் பொதுமக்களின் உயிரை பாதுகாக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...