தாராபுரம் அருகே சட்டவிரோதமாக கிராவல் மண் வெட்டி எடுக்க பயன்படுத்தப்பட்ட ஹிட்டாச்சி இயந்திரம், இரண்டு லாரிகள் பறிமுதல்

ஜோதியம்பட்டி என்ற இடத்தில் சட்டவிரோதமாக கிராவல் மண்வெட்டி எடுக்க பயன்படுத்தப்பட்ட ஹிட்டாச்சி இயந்திரம் மற்றும் இரண்டு லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து தப்பியோடிய ஓட்டுநர்களை தேடிவருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள குண்டடம் அடுத்துள்ள ஜோதியம்பட்டி என்ற இடத்தில் சட்டவிரோதமாக கிராவல் மண்வெட்டி எடுத்து விற்பனைக்கு கொண்டு செல்வதாக தாராபுரம் கோட்டாட்சியர் செந்தில் அரசன் மற்றும் வட்டாட்சியர் கோவிந்தசாமி ஆகியோருக்கு தகவல் கிடைத்தது.



அந்த தகவலின் அடிப்படையில் தாராபுரம் கோட்டாட்சியர் செந்தில் அரசன் உத்தரவின் பேரில் தாராபுரம் வட்டாட்சியர் கோவிந்தசாமி, ஜோதியம்பட்டி பகுதியில் புல.எண் 230/6 என்ற பூமியில் சண்முகசுந்தரம் என்பவருக்கு சொந்தமான இடத்தில் சட்ட விரோதமாக லாரிகள் மூலம் கிரவல் மண் அள்ளிக்கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.



சம்பவ இடத்துக்கு தாராபுரம் வட்டாட்சியர் வருவதை அறிந்த ஹிட்டாச்சி வாகன ஓட்டுனர் மற்றும் டிப்பர் லாரி ஓட்டுனர்கள் சாவியை எடுத்துக் கொண்டு பேட்டரி ஒயர்களை கழற்றி விட்டு தப்பி சென்றனர்.



அதன் பிறகு குண்டடம் காவல் ஆய்வாளருக்கு தாராபுரம் வட்டாட்சியர் கோவிந்தசாமி தகவல் தெரிவித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த குண்டடம் போலீசார், குண்டடம் நில வாருவாய் அலுவலர், குண்டடம் கிராம நிர்வாக அலுவலர்கள் உதவியுடன் பேட்டரி மற்றும் மாற்றுச் சாவியை பயன்படுத்தி இரண்டு லாரிகளையும் ஹிட்டாச்சி இயந்திரத்தையும் பறிமுதல் செய்து குண்டடம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

தாராபுரம் வட்டாட்சியர் கோவிந்தசாமி அளித்த தகவலின் பெயரில் இரண்டு லாரிகள் மற்றும் ஹிட்டாச்சி இயந்திரத்தை பறிமுதல் செய்து தப்பி சென்றவர்களை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...