சுண்டக்காமுத்தூரில் குடோனில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 133 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் - ஒருவர் கைது

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக குடோனில் பதுக்கி வைத்திருந்த சுண்டக்காமுத்தூர் பகுதியைச் சேர்ந்த ஜூஹாரமல் (43) என்பவரை காவல் துறையினர் கைது செய்து, அவரிடமிருந்து, ரூ.2 லட்சம் மதிப்புள்ள சுமார் 133 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.


கோவை: கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் புழக்கத்தை கட்டுப்படுத்த காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் நேற்று மே.29 பேரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுண்டக்காமுத்தூர் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனைக்காக குடோனில் பதுக்கி வைத்திருப்பதாக தனிப்படை காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்படை காவ‌ல் துறை‌யின‌ர் சுண்டக்காமுத்தூர் அருகே சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை குடோனில் பதுக்கி வைத்திருந்த அதே பகுதியைச் சேர்ந்த ஜூஹாரமல் (43) என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

மேலும் அவரிடமிருந்து ரூபாய் 2 லட்சம் மதிப்புள்ள சுமார் 133 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...