உடுமலை அருகே பண்ணைக்கிணறு பகுதியில் மழை நீர் குட்டையில் மூழ்கி இரண்டு பள்ளி சிறுவர்கள் உயிரிழப்பு

பண்ணைக்கிணறு பகுதியில விளையாடச் சென்ற இரண்டு பள்ளிச் சிறுவர்கள் மழைநீர் குட்டையில் மூழ்கி உயிரிழந்தனர். சிறுவர்களின் உடல்களை மீட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள குடிமங்கலம் ஒன்றியம் பண்ணைக்கிணறு ஊராட்சியில் நேற்று முன்தினம் விளையாடச் சென்ற ஐந்து சிறுவர்களில் மூன்று சிறுவர்கள் வீடு திரும்பினர்.

மிதுன் ராஜ்(11) (5-ம் வகுப்பு மாணவன்) மற்றும் வினோத்(12) (6-ம் வகுப்பு மாணவன்) மட்டும் வீடு திரும்பாத நிலையில் பதற்றம் அடைந்து பெற்றோர் குடிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.



காவல்துறையினர் பல்வேறு பகுதிகளில் இரண்டு சிறுவர்களின் புகைபடங்கள் அனுப்பி தேடி வந்தனர். இந்த நிலையில் இன்று காலையில் பண்ணை கிணறு அருகில் உள்ள மழை நீர் குட்டையில் இரண்டு சிறுவர்கள் உடல் மிதப்பதாக குடிமங்கலம் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.



சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புதுறையினர் மழை நீர் குட்டையில் உயிரிழந்த சிறுவர்களின் உடல்களை மீட்டனர். பின்னர் காணாமல் போன சிறுவர்கள் என உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து குடிமங்கலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

உடுமலை அருகே விளையாடச் சென்ற பள்ளி மாணவர்கள் மழை நீர் குட்டையில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் இந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...