கோவையிலிருந்து அமெரிக்கா, கனடாவிற்கு ஜூன் 2ம் தேதி முதல் ஏர் இந்தியா விமான சேவை தொடக்கம்

டெல்லியில் இருந்து ஏர் இந்தியாவின் கனெக்டிங் பிளைட் மூலம் நியூ ஆர்க், நியூ யார்க், வாஷிங்டன், சிகாகோ, வான்கூவர் மற்றும் டொரோண்டோவிற்கு செல்ல முடியும். டெல்லியிலிருந்து கோவை வந்து சேர விமான சேவை வசதியும் உள்ளது.


கோவை: வருகின்ற ஜூன் 2ம் தேதி முதல் கோவையிலிருந்து டில்லி மற்றும் மும்பை கனெக்டிங் பிளைட் மூலம் அமெரிக்கா மற்றும் கனடாவிற்கு செல்லக்கூடிய விமான சேவை வசதியை பிரபல விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா ஆரம்பிக்க உள்ளதாக அண்மையில் தெரிவித்துள்ளது.

அதன்படி ஜூன் 2ஆம் தேதி முதல் அமெரிக்காவில் உள்ள ஐந்து நகரங்களான நியூ ஆர்க் (New Ark), நியூயார்க் (New York), வாஷிங்டன், சிகாகோ மற்றும் சான் பிரான்சிஸ்கோவுக்கும், கனடாவில் உள்ள வான்குவார் மற்றும் டோராண்டோ ஆகிய நகரங்களுக்கும் டெல்லி மற்றும் மும்பை வழியாக கோவையிலிருந்து செல்ல முடியும்.

ஏர் இந்தியாவின் புதிய நான்-ஸ்டாப் கோவை-டெல்லி விமான சேவை, கோவையிலிருந்து (திங்கள் - வெள்ளி மற்றும் ஞாயிறுகளில்) மாலை 6.45 மாணிக்கு புறப்பட்டு இரவு 9.50 மணிக்கு டெல்லி வந்து சேரும்.









டெல்லியில் இருந்து ஏர் இந்தியாவின் கனெக்டிங் பிளைட் மூலம் நியூ ஆர்க், நியூ யார்க், வாஷிங்டன், சிகாகோ, வான்கூவர் மற்றும் டொரோண்டோவிற்கு செல்ல முடியும். பின்னர் அங்கிருந்து ஏர் இந்தியா விமானம் மூலமாகவே டெல்லி வர விமான சேவைகள் உள்ளது. பின்னர் டெல்லியிலிருந்து மதியம் 3 மணிக்கு புறப்பட்டு மாலை 6 மணிக்கு கோவை வந்து சேரவும் விமான சேவை உள்ளது.

அதேபோல கோவையில் இருந்து மும்பை நகருக்கு தினசரி காலை 9 மணிக்கு விமான சேவை உண்டு. காலை 9 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் விமானம் காலை 10.50 மணிக்கு மும்பையில் தரை இறங்கும்.

மும்பையில் இருந்து சான் பிரான்சிஸ்கோ நகரத்துக்கு ஏர் இந்தியாவின் கனெக்டிங் பிளைட் மூலம் செல்ல முடியும். அங்கிருந்து ஏர் இந்தியா விமானம் வழியாகவே மும்பை வரவும் முடியும்.

பின்னர் மும்பையில் இருந்து காலை 6.30 மணிக்கு ஏர் இந்தியா விமானம் மூலம் புறப்பட்டு காலை 8.25 மணிக்கு கோவை வந்து சேர்ந்திடலாம். இதனால் இனி கோவையில் இருந்து 7 வெளிநாட்டு நகரங்களுக்கு எளிமையாக செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...