கோவை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன்பு பத்திரிகையாளர் மறைவிற்கு சக பத்திரிக்கையாளர்கள் அஞ்சலி

தினமணி பத்திரிக்கை புகைப்பட கலைஞராக பணியாற்றி வந்த அஜய் ஜோசப் சாலை விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு கோவை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன்பு சக பத்திரிக்கையாளர்களும், புகைப்பட கலைஞர்களும் மவுன அஞ்சலி செலுத்தினர்.


கோவை: கோவையில் தினமணி பத்திரிக்கை புகைப்பட கலைஞராக பணியாற்றி வந்தவர் அஜய் ஜோசப். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை பொள்ளாச்சி பகுதியில் வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது நாய் ஒன்று குறுக்கே வந்ததால் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளானார். அந்த விபத்தில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

பின்னர் அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வந்த நிலையில் நேற்று மே.29 சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில் அவருக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோவை மாவட்ட பத்திரிக்கையாளர்கள், புகைப்பட கலைஞர்கள் இன்று மே.30 அஞ்சலி செலுத்தினர்.

அப்போது அஜய் வேலையின் போது எவ்வாறு துறுதுறுப்புடன் இருப்பார், அவரது எளிமையான பழக்க வழக்கங்கள், நட்பு ரீதியான விஷயங்கள் என பலவற்றை பகிர்ந்து கொண்டனர். பின்னர் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும் இந்நிகழ்வில் செய்தியாளர்கள், புகைப்பட கலைஞர்கள் அனைவரும் வாகனங்களில் செல்லும் போது பாதுகாப்புடன் செல்ல வேண்டுமென மூத்த பத்திரிக்கையாளர்கள் அறிவுறுத்தினர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...