பொள்ளாச்சியில் பிரசித்தி பெற்ற சூலக்கல் மாரியம்மன் கோவில் திருவிழா - தேரை வடம் பிடித்து இழுத்து பக்தர்கள் தரிசனம்

திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர்த்திருவிழா இன்று தொடங்கியது. மூன்று நாட்கள் நடக்கும் தேர் திருவிழாவின் முதல் நாளான இன்று அலங்கரிக்கப்பட்ட தேரில் சிவப்பு பட்டு உடுத்தி அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.


கோவை: பொள்ளாச்சியை அடுத்துள்ள சூலக்கல் பகுதியில் அமைந்துள்ளது சூலக்கல் மாரியம்மன் கோவில். இது மிகவும் பிரசித்தி பெற்ற பழமையான கோவிலாகும். இங்கு அமைந்துள்ள அம்மனை வழிபாடு செய்ய உள்ளூர் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செல்வது வழக்கம்.

இந்தக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் முதல் வாரத்தில் கோயில் திருவிழா நடைபெற்று வருவது வழக்கம். இந்தாண்டுக்கான தேர்த்திருவிழா கடந்த 13.ஆம் தேதி நோன்பு சாட்டுதலுடன் தொடங்கி நாள்தோறும் கிராம மக்கள் பூச்சட்டி எடுத்தும், அலகு குத்தியும் வழிபாடு செய்து வந்தனர்.



இந்நிலையில் இந்த திருவிழாவில் முக்கிய நிகழ்வான தேர்த்திருவிழா இன்று தொடங்கியது மூன்று நாட்கள் நடக்கும். தேர் திருவிழாவின் முதல் நாளான இன்று அலங்கரிக்கப்பட்ட தேரில் சிவப்பு பட்டு உடுத்தி அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.



இதையடுத்து கடந்த 17 நாட்களாக விரதமிருந்த பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். முக்கிய வீதிகளில் அசைந்தாடி வந்த தேர் மீது பக்தர்கள் வாழைப்பழம் வீசி பயபக்தியுடன் வழிபட்டனர். இன்று தொடங்கி முதல்நாள் வலம் வந்த தேர் கிராமத்தின் கிழக்கு எல்லைப் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டு, தொடர்ந்து நாளை மற்றும் நாளை மறு நாள் தொடர்ந்து மூன்று நாட்கள் தேர் திருவீதி உலா வந்து கோவிலை வந்து அடையும் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்த தேர் திருவிழாவைக்காண சூலக்கல் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமங்களில் இருந்து சுமார் 5000த்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழித்து சாமி தரிசனம் செய்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...