கோவை மருதமலை அருகே உடல் நலம் குன்றிய பெண் யானைக்கு மருத்துவக்குழுவினர் சிகிச்சை

உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண் யானைக்கு மருத்துக்குழுவினர் சிகிச்சை அளித்து கண்காணித்து வருகின்றனர். தாயை பார்த்து வேதனையுடன் அருகிலேயே நின்றிருக்கும் குட்டி யானைக்கும் உணவு வழங்கி மருத்துவக்குழுவினர் பார்த்து வருகின்றனர்.


கோவை: கோவை மருதமலை அடிவார பகுதியில் இன்று மே.30 வனத்துறையினர் ரோந்து பணி மேற்கொண்டிருந்த போது, யானை பிளிரும் சத்தம் கேட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து அப்பகுதியில் ஆய்வு செய்த போது, பெண் யானை ஒன்று குட்டியுடன் இருப்பது தெரியவந்தது. அந்த பெண் யானைக்கு உடல் நலம் குன்றிய நிலையில் குட்டி யானை அதன் தாய் அருகிலேயே நின்றது.



தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் தலைமையில் கோவை வனச்சரக பணியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று யானைக்கு சிகிச்சை அளித்து, பழங்கள் கொடுத்து கண்காணித்து வருகின்றனர்.



மேலும், தாயை பார்த்து வேதனையுடன் நிற்கும் குட்டி யானைக்கும் உணவு வழங்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...