கோவை கொடிசியாவில் வரும் 6ஆம் தேதி சர்வதேச எந்திரம் மற்றும் பொறியியல் தொழில் கண்காட்சி

கண்காட்சியில் ஏர் கம்பரசர், லேசர் கட்டிங் மிஷின்கள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், எந்திர கருவிகள், உதிரி பாகங்கள், வங்கி, நிதிநிறுவனங்கள், பார் கோடு பிரிண்டர்கள், மெட்டீரியல் ஹேண்ட்லிங் சாதனங்கள், எடைமேடை, தராசுகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கம் (கொடிசியா) சார்பில் அவினாசி சாலை அருகே உள்ள கொடிசியா வர்த்தக மைய வளாகத்தில் 20-வது ‘இன்டெக்-2024' என்ற சர்வதேச எந்திரம் மற்றும் பொறியியல் தொழில் கண்காட்சி வருகிற 6-ந் தேதி தொடங்குகிறது.

இந்த நிலையில் கோவை அண்ணாசாலை கொடிசியா வளாகத்தில் இதுகுறித்து கொடிசியா தலைவர் சிவஞானம், கண்காட்சி தலைவர் ராமச்சந்திரன் ஆகியோர் இன்று (30-05-2024) கண்காட்சி லோகோவை வெளியிட்டு நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.



அப்போது அவர்கள் பேசியதாவது, கோவை கொடிசியா வளாகத்தில் 25 ஆயிரம் சதுர மீட்டரில் 20-வது சர்வதேச எந்திர மற்றும் பொறியியல் தொழில் கண்காட்சி வருகிற 6-ந் தேதி முதல் 10-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த கண்காட்சிக்கு அமெரிக்கா, தைவான், சீனா, ஜெர்மனி, ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து நவீன எந்திரங்களை காட்சிப்படுத்துகிறார்கள்.

இதுதவிர மகாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, அரியானா, பஞ்சாப், உத்தர பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, ஒடிசா மற்றும் தமிழ்நாட்டில் இருந்தும் பல்வேறு தொழில் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்கிறார்கள். 495 நிறுவனங்கள் பங்கேற்கின்றன.

இந்த கண்காட்சியில் ரூ.800 கோடி வர்த்தகம் நடைபெறும் என்று எதிர்பார்க்கிறோம். அத்துடன் உள்நாட்டு, சர்வதேச அளவில் இருந்து 50 ஆயிரம் பேர் வரை பங்கேற்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தொழில் சார்ந்தவர்களுக்கு இந்த கண்காட்சியில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை அரங்கில் உள்ள எந்திரங்கள் இயக்கி காட்டி விளக்கமும் அளிக்கப்படும். அதுபோல் பொதுமக்களுக்கு மாலை 3 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த கண்காட்சியை பார்வையிடலாம்.

மாணவர்களுக்கு வருகிற 10-ந் தேதி அன்று மட்டும் மதியம் 2 மணி முதல் அடையாள அட்டையை காட்டி இலவசமாக பார்வையிடலாம். அதுபோல் பொது பார்வையாளருக்கு மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை அனுமதிக்கப்படுவார்கள் இவர்களுக்கு நுழைவு கட்டணம் ரூ.150. கண்காட்சியை டி.வி.எஸ். சப்ளை செயின் சொலியூஷன்ஸ் நிர்வாக தலைவர் தினேஷ், சி.ஐ.ஐ. தென்மண்டல தலைவர் நந்தினி ரங்கசாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று திறந்து வைக்கிறார்கள்.

மேலும் 9-ந் தேதி மாலை 6.30 மணியளவில் விருது வழங்கும் விழா நடைபெறுகிறது. கண்காட்சியில் ஏர் கம்பரசர், லேசர் கட்டிங் மிஷின்கள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், எந்திர கருவிகள், உதிரி பாகங்கள், வங்கி, நிதிநிறுவனங்கள், பார் கோடு பிரிண்டர்கள், மெட்டீரியல் ஹேண்ட்லிங் சாதனங்கள், எடைமேடை, தராசுகள், அளவீட்டு கருவிகள், காஸ்டிங், போர்ஜிங், அளவை எந்திரங்கள், கட்டிங் டூல்ஸ், மெக்கானிக்கல் பவர் டிரான்ஸ்மிஷன், கல்வி நிறுவனங்கள், என்ஜின், ஜெனரேட்டர்கள், ஆல்டர்னேட்டர், எலக்ட்ரிக் மோட்டார்கள், காகித உற்பத்தி கப் உற்பத்தி எந்திரங்கள், பவுண்டரி கருவிகள் இடம்பெறுகின்றன.

இதுதவிர பவர்டூல்ஸ், ரெப்ரிஜிரேஷன் மற்றும் கூலிங் டவர்ஸ், ஸ்க்ரு, ஸ்பேனர்ஸ், ஹைட்ராலிக், நியூமெட்டிக்ஸ், சர்வோ மோட்டார்கள், வெல்டிங் கருவிகள், உதிரிபாகங்கள், இண்டஸ்ட்டரியல் ரோபோட்டிக்ஸ், மரவேலைப்பாட்டு கருவிகள் உள்பட பல்வேறு நவீன கருவிகள் இடம்பெறும். அத்துடன் மத்திய, மாநில அரசு தொழில் நிறுவனங்கள், துறைகள், தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்ப சேவைகள் கிடைக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர். இதில் கொடிசியா செயலாளர் சசிகுமார், கண்காட்சி துணை தலைவர் பொன்னுச்சாமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...