குரும்பபாளையம் அருகே கஞ்சா சாக்லேட்களை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது

கஞ்சா சாக்லேட்களை விற்பனைக்கு வைத்திருந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சீதகாந்தா நாயக் (23) என்பவரை காவல் துறையினர் கைது செய்து அவரிடம் இருந்து 1 கிலோ 300 கிராம் கஞ்சா சாக்லேட்களை பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள குரும்பபாளையம் பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்பனைக்கு வைத்திருப்பதாக இன்று மே.30 பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் அடிப்படையில் குரும்பபாளையம் அருகே சென்று காவல் துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது கஞ்சா சாக்லேட்களை விற்பனைக்கு வைத்திருந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சீதகாந்தா நாயக் (23) என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

மேலும் அவரிடமிருந்து 1 கிலோ 300 கிராம் கஞ்சா சாக்லேட்களை பறிமுதல் செய்த காவல் துறையினர், அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...