துடியலூர் அருகே கேரளா லாட்டரி சீட்டு விற்பனை செய்த கும்பலை சேர்ந்த 3 பேர் கைது

கேரள மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த மூன்று பேரை கைது செய்த காவல்துறையினர், அவர்களிடம் இருந்து மொத்தம் 96 கேரள மாநில லாட்டரி டிக்கெட், ஒரு கார், 9 செல்போன் ரூ.1 லட்சத்து 61 ஆயிரம் பணம், 5 லேப்டாப் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவை துடியலூர் பகுதிகளில் தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி டிக்கெட் விற்பனை செய்யப்படுவதாக துடியலூர் காவல்துறையினருக்கு தகவல் வந்தது.

அதன்பேரில் போலீசார் நேற்று மே.29 துடியலூர்–சரவணம்பட்டி ரோட்டில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட் விற்பனை செய்ததாக எஸ்.எம்.பாளையம், இ.பி. காலனியை சேர்ந்த வினோத்குமார் (வயது 39), வெள்ளக்கிணறு சதீஷ்குமார் (வயது 39), எஸ்.எம்.பாளையம் பிரதீப் (வயது 34), நல்லாம்பாளையம் ஆதிஷ் கண்ணன் (வயது28) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் பிரபு என்பவர் தப்பி ஓடிவிட்டார். இவர்களிடமிருந்து மொத்தம் 96 கேரள மாநில லாட்டரி டிக்கெட், ஒரு கார், 9 செல்போன் ரூ.1 லட்சத்து 61 ஆயிரம் பணம், 5 லேப்டாப் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...