கோவை காந்திபுரத்தில் பழக்கடையில் ரூ.10,000 திருடிய 17 வயது சிறுவன் கைது

காந்திபுரம் பேருந்து நிலையத்தில் முத்துவேல் என்பவருக்கு சொந்தமான பழக்கடையில் ரூ.10,000 ஆயிரம் பணத்தை திருடிய ஏற்காட்டை சேர்ந்த 17 வயது சிறுவனை காவல்துறையினர் கைது சிறுவர் சீர் திருத்த பள்ளியில் அடைத்தனர்.


கோவை: கோவை ரத்தினபுரி சம்பத் தெருவை சேர்ந்தவர் முத்துவேல்(55). இவர் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் பழக்கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் சங்கர் என்பவர் தங்கியிருந்து வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், கடந்த 28ம் தேதி கல்லாவில் ரூ.10 ஆயிரம் பணத்தை வைத்து விட்டு செல்வதாக சங்கரிடம், முத்துவேல் கூறிவிட்டு சென்றார்.

மறுநாள் காலையில் சங்கர் போன் செய்து கடை உரிமையாளர் முத்துவேலிடம், பக்கத்து கடையில் வேலை செய்யும் 17 வயது சிறுவன் ரூ.10 ஆயிரத்தை திருடி சென்று விட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் சிறுவன் பணம் திருடியது உறுதியானது. இருவரும் அவரை தேடி வந்தனர். இதனைத்தொடர்ந்து நேற்று மே.30 சிறுவன் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருப்பதாக முத்துவேலுக்கு தெரியவந்தது.

அங்கு சென்று அந்த சிறுவனை பிடித்து காட்டூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், பணம் திருடியது சேலம் மாவட்டம் ஏற்காட்டை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. போலீசார் சிறுவனை கைது செய்து சிறுவர் சீர் திருத்த பள்ளியில் அடைத்தனர். அவனிடம் இருந்து ரூ.1,700 பறிமுதல் செய்யப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...