உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார் கோவை ஆட்சியர் கிராந்தி குமார் பாடி

போதை பழக்கத்திற்கு இளைய சமுதாயம் அடிமையாகாமல் சுய கட்டுப்பாட்டுடன் திகழ வேண்டும் என்பதை வலியுறுத்தி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய விழிப்புணர்வு பேரணி ரேஸ் கோர்ஸில் உள்ள மாவட்ட சுகாதாரத்துறை அலுவலகம் வரை நடைபெற்றது.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் தொடங்கி வைத்தார். அதற்கு முன்னதாக புகையிலையை ஒழிக்க வேண்டும் என்று அனைவரும் கையெழுத்துயிட்டனர்.



இப்பேரணியில் 150-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.



போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் வகையிலும், போதை பழக்கத்திற்கு இளைய சமுதாயம் அடிமையாகாமல் சுய கட்டுப்பாட்டுடன் திகழ வேண்டும், ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்பதனை வலியுறுத்தும் விதமாக கோவை ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து ரேஸ் கோர்ஸில் உள்ள மாவட்ட சுகாதாரத்துறை அலுவலகம் வரை பேரணியாக சென்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...