மலேசியாவில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் தங்கம் வென்று திருப்பூர் மாணவர்கள் சாதனை

மலேசியாவில் கடந்த வாரம் நடைபெற்ற சிலம்பம் போட்டியில், குகன், வைஷ்ணவி, மோதிகா ஆகியோர் தங்க பதக்கமும், தருண்குமார் என்ற மாணவன் வெண்கலப்பதக்கமும் என்று சாதனை படைத்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை சேர்ந்த குகன் என்ற சிறுவன் மலேசியாவில் நடைபெற்ற பாரம்பரிய சிலம்ப போட்டியில்பங்கேற்று முதல் பரிசான தங்கம் மற்றும் 3 பரிசான வெண்கலம் வென்று அசத்தினார். மேலும் பாரம்பரிய கலையான சிலம்பத்தை தமிழக அரசும்,மத்திய அரசும் விளையாட்டு போட்டிகளில் முக்கியத்துவம் தரவேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

சிலம்பம் ஐந்து வகை நிலங்களுக்கும் பொதுவான போர்முறை கலை சிலம்பம் ஆகும். தமிழ் எழுத்துக்களுக்கு எப்படி ஓர் கற்கும் முறை உள்ளதோ அதே போன்று சிலம்பத்திற்கும் ஓர் கற்கும் வழி முறை உள்ளது. சிலம்பத்தில் வீடுகட்டும் போர்முறை உள்ளது. நாம் எப்படி இயற்கையில் இருந்து பாதுகாக்க, குடியிருக்க வீடு கட்டி பாதுகாப்பாக வாழ்கிறோமோ அதே போல் சிலம்பத்தில் பதினாறு (16 வீடுகட்டும் முறை) சுற்று முறை உள்ளது.



பதினாறு சுற்று முறையில் நாம் எதிரியிடமிருந்து நம்மை பாதுகாத்து போர்செய்ய முடியும். சிலம்பத்தை மூன்று வகையில் பயன்படுத்துகிறோம்.(சிலம்ப விளையாட்டு, சிலம்ப சண்டை, சிலம்ப ஆட்டம்)

சிலம்ப விளையாட்டு முறையினை மாட்டின் வால் சுற்றும் முறையில் இருந்து கற்று விளையாடுகிறோம். சிலம்ப சண்டை முறையினை யானையின் தும்பிக்கை சுற்று முறையில் இருந்து கற்று சண்டையிடுகிறோம் மற்றும் சிலம்ப ஆட்டமுறையினை புலியிடம் இருந்து கற்று ஆடுகிறோம். இந்த மூன்று விலங்குகள் தான் சிலம்பத்திற்க்கான மிக முக்கியமான ஆசிரியர்களாக பார்க்கப்படுகிறது. சிலம்பம் மன அமைதியை கொண்டுவரும், மனம் ஒருநிலைப்படும். சிலம்பம் விளையாடும் பொழுது கண்கள் திறந்திருக்கும், சத்தங்கள் கேட்கும். ஆனால் காட்சிகள் தெரியாது. எனவே சிலம்பம் விளையாடுவது ஒருவகையான தியானம் ஆகும். எனவே சிலம்பம் விளையாடுவது தியானம் செய்வதும் ஒன்றுதான்.

இத்தனை சிறப்பம்சங்களை கொண்ட இந்த பாரம்பரிய வீர விளையாட்டுக்கள் அழிவின் விளிம்பில் இருந்து தற்போது மீண்டும் புத்துணர்ச்சியுடன் பல்வேறு நாடுகளில் மீண்டும் மீட்டெடுக்கப்பட்டு அதில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களால் பயிற்றுவிக்கப்படுகின்றது. அந்த வகையில் ஈரோடு கலைத்தாய்அறக்கட்டளை தமிழகத்தில் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இந்த பாரம்பரிய வீர விளையாட்டை சிறுவர் சிறுமிகளுக்கு கற்றுக்கொடுத்து வருகின்றனர்.

மேலும் கடந்த வாரத்தில் மலேசியாவில் 15 நாடுகள் கலந்து கொண்ட உலக ஓபன் சேம்பியன்சிப் போட்டிகள் நடைபெற்றது. இதில் இந்தியா,மலேசியா, கத்தார், துபாய், இலங்கை, ஜெர்மன் உட்படபல்வேறு நாடுகளில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு வருடமும் 150 முதல் 200 மாணவர்கள் மட்டுமே கலந்துகொண்ட நிலையில் தற்போது600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

இந்த போட்டியில் கலைத்தாய் சிலம்பப் பயிற்சி பள்ளி சார்பில் 10 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த போட்டிகள் வயது மற்றும் எடை பிரிவுகளிலும், நெடுக்காம்பு, அலங்கார வீச்சு, பொருத்துதல் ஆகிய பிரிவுகளில் நடைபெற்றது. அதில் காங்கேயத்தை சேர்ந்த குகன் என்ற மாணவன் 13-14 வயது நெடுங்கம்பு பிரிவில் முதல் பரிசான தங்கமும், தனித்திறமை என்ற பிரிவில் வெண்கலம் பரிசும் வென்றான். இதே போல் காங்கேயம் அடுத்த வெள்ளகோவில் பகுதியை சேர்ந்த வைஷ்ணவி 10-12 வயது சிறுவர் பிரிவில்தனித்திறமை, நெடுங்கம்பு சுற்றுகளில்2 தங்கம் வென்றார். மோதிகா 19-21 வயது உடைய பெரியவர்கள் பிரிவில் தங்கம் மற்றும் வெள்ளி பதங்கங்கள் வென்றார்.தருண்குமார் 16-18 பெரியவர்கள் பிரிவில் இரண்டு வெண்கலப்பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். பாரம்பரிய விளையாட்டு போட்டிகளில் காங்கேயம் பகுதியில் இருந்து கலந்து கொண்டு பாதங்களை வென்ற மாணவ, மாணவிகளை உறவினர்கள், பொதுமக்கள் சமூகவலைத்தளங்களில் பாராட்டுக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...