கோவை மருதமலை வனப்பகுதியில் உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண் யானைக்கு 2வது நாளாக சிகிச்சை

உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண் யானைக்கு குளுக்கோஸ், நோய் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் நீர்ச்சத்து உணவுகள் கொடுத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. யானையின் உடல் நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து கிரேன் மூலமாக காட்டு யானை தூக்கி நிற்க வைக்கப்பட்டது.


கோவை: கோவை மருதமலை அடிவார வனப்பகுதியில் நேற்று (30.05.2024) காலை உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பெண் காட்டு யானை குட்டியுடன் கண்டறியப்பட்டது. நேற்று முழுவதும் உடல் நலம் பாதிக்கப்பட்ட காட்டு யானைக்கு வனத்துறை மற்றும் கால்நடை மருத்துவ குழுவினர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்த நிலையில் இரண்டாவது நாளாக இன்று (31.05.2024) காலை முதல் குளுக்கோஸ், நோய் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் நீர்ச்சத்து உணவுகள் கொடுத்து சிகிச்சை அளித்து வந்தனர்.



யானையின் உடல் நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து கிரேன் மூலமாக காட்டு யானை தூக்கி நிக்க வைக்கப்பட்டது.

மேலும் அதிக அளவு தண்ணீர் யானை மீது பீச்சி அடிக்கப்பட்ட நிலையில், சோர்வாக காணப்பட்ட யானை மீண்டும் உடல் நலம் தேறி வருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...