பொள்ளாச்சி அருகே குள்ளக்காபாளையத்தில் வீட்டில் கஞ்சா செடி வளர்த்து வந்த நபர் கைது

குள்ளக்காபாளையம் கிராமத்தில் வீட்டின் முன்பு கஞ்சா செடிகளை வளர்த்து வந்த ஈஸ்வரன் (52) என்பவரை போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள குள்ளக்காபாளையம் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் சட்டவிரோதமாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா செடிகளை வளர்த்து வருவதாக தாலுகா காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, அங்கு விரைந்த போலீசார் திருப்பூர் பனியன் தொழிற்சாலையில் டெய்லராக பணியாற்றி வரும் ஜே.ஜே.காலனியை சேர்ந்த ஈஸ்வரன் (52) என்பவர் வீட்டை ஆய்வு செய்து போது வீட்டின் முன்பு கஞ்சா செடிகள் வளர்த்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.



பின்னர், அங்கிருந்த 13 கஞ்சா செடிகளை பறிமுதல் செய்த போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்ட போது கஞ்சா செடிகளை வளர்த்து தனது பயன்பாட்டுக்கும், மற்றவர்களுக்கும் விற்பனை செய்ய முற்பட்டது தெரியவந்தது. பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...