அன்னூரில் மழைநீர் செல்லும் பாதை அடைப்பு - பொதுமக்கள் சாலை மறியல்

அன்னூர் பேரூராட்சி புவனேஸ்வரி நகர் பகுதியில் மழை நீர் செல்லும் பாதையை சில நபர்கள் மண் கொட்டி அடைத்து வைத்திருந்தனர். இதனைக்கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


கோவை: கோவை அன்னூர் பேரூராட்சி 5-வது வார்டு புவனேஸ்வரி நகர் பகுதியில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றாததை கண்டித்தும், மழைநீர் செல்லும் பாதையை தனிநபர் அடைத்திருப்பதை கண்டித்தும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நேற்று மே.31 சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் சத்தி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.



இதனையடுத்து, சத்தி சாலையில் அடைக்கப்பட்ட மழைநீர் செல்லும் பாதை (மே.31) திறக்கப்பட்டது.

அன்னூர் பேரூராட்சி புவனேஸ்வரி நகர் பகுதியில் மழை நீர் செல்லும் பாதையை சில நபர்கள் மண் கொட்டி அடைத்து வைத்திருந்தனர்.



இதனால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.



சம்பவ இடத்திற்கு வந்த டிஎஸ்பி நமச்சிவாயம், ஆய்வாளர் நித்யா, மணிகண்டன் ஆகியோர் முன்னிலையில் நீர்வழிப்பாதை திறக்கப்பட்டதால் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...