கோவை மருதமலை அருகே குட்டி யானை மாயம் - தேடும் பணியில் வனத்துறையினர் தீவிரம்

மருதமலையில் உடல்நிலை பாதிக்கப்பட்ட பெண் யானையில் அருகில் இருந்த குட்டியானை நேற்றிரவு மாயமாகியுள்ளது. அந்த குட்டியானை எங்கு சென்றுள்ளது என்று வனத்துறையினர் தேடி வருகின்றனர்.


கோவை: கோவை மருதமலையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண் யானைக்கு மூன்றாவது நாளாக தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் தாய் யானையுடன் இருந்த குட்டி யானை காணாமல்போனதால் தேடும் பணியில் வனத்துறை ஈடுப்பட்டுள்ளனர்.

அதன்படி கோவை மருதமலை வனப் பகுதியில் உடல் நலக் குறைவால் கண்டறியப்பட்ட பெண் யானைக்கு கால்நடை மருத்துவ குழுவினரும், வனத் துறையினரும் சிகிச்சை அளித்து வருகின்றனர். கிரேன் மூலம் யானை நிற்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தாய் யானையின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்து தானாக உணவு உட்கொள்கிறது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக சிகிச்சையின் போது குட்டி யானையுடன் சுற்றித் திரிந்த மற்றொரு குட்டி யானை அந்த யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பகுதியில் சுற்றி திரிந்ததாகவும், நேற்று இரவு அந்த குட்டி யானையுடன் இந்த ஆண் குட்டி யானை சென்று இருக்க வாய்ப்பு உள்ளதாகவும், மேலும் அதனை தேடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் வனத்துறையினர் இன்று ஜூன்.1 தகவல் தெரிவித்து உள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...