கோவை குளங்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நடைபெற்ற 5000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் ஆட்சியர் கிராந்தி குமார் பாடி

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கோவை குளங்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் மதுக்கரை பிள்ளையார்புரம் வனத்துறைக்கு சொந்தமான 27 ஏக்கர் இடத்தில் 5000 நாட்டு மரங்கள் நடப்பட்டன.


கோவை: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மதுக்கரை பிள்ளையார்புரம் வனத்துறைக்கு சொந்தமான 27 ஏக்கர் வனப்பகுதியில் கோவை குளங்கள் பாதுகாப்பு இயக்கம், தனியார் நிறுவன நிதி பங்களிப்புடன் சுமார் 5000 நாட்டு மரக்கன்றுகள் நடுவு நிகழ்வுக்கு ஏற்பாடு செய்தது.



இந்த நிகழ்வை கோவை மாவட்ட ஆட்சியர் காந்தி குமார் பாடி துவங்கி வைத்தார்.



இந்த நிகழ்வில் மாவட்ட நிர்வாகம், வனத்துறை, கல்லூரி மாணவர்கள், இந்திய ராணுவம் மற்றும் பொதுமக்கள் என 800-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



இந்த நிகழ்வில் குழந்தைகள், பெற்றோர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.



குறிப்பாக நூறு வகையான நாட்டு மரங்கள் நடப்பட்டது. கோவை குளங்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நீர்நிலைகள் தூர்வாருதல், பசுமைப் பரப்பை அதிகப்படுத்துதல் உள்ளிட்ட களப்பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...