மழை நீரை பொதுமக்கள் முழுமையாக சேமிக்க வேண்டும் - கோவை மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் அமைந்துள்ள பழுதடைந்த மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை சீர் செய்து மழை நீரை முழுமையாக சேமிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.



கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்க கூட்டரங்கில், மழைநீர் சேகரிப்பு தொடர்பான கருத்தரங்கு கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுருபிரபாகரன் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி தலைமையில் இன்று (01.06.2024) நடைபெற்றது.



இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவிக்கையில், கோயம்புத்தூர் மாவட்டத்தின் காலநிலை மாற்றம் நமக்கு நன்மையாக அமைந்தாலும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் நொய்யல் ஆறு மற்றும் சிறுவாணி ஆறு போன்றவைகள் நமக்கு நீர் ஆதாரமாக விளங்குகின்றது. கோயம்புத்தூர் மாவட்டத்தின் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்றாற்போல், மழைநீரை முழுமையாக சேமிக்கின்ற வகையில் பொதுமக்கள் அனைவருக்கும் மழைநீரை சேமிப்பதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தி, வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் அமைந்துள்ள பழுதடைந்த மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை சீர் செய்து மழை நீரை முழுமையாக சேமிக்க வேண்டும், மழைநீர் சேகரிப்பதற்கான முயற்சிகள் சரி வர இல்லாமல் இருப்பதால் காலநிலை மாற்றத்தினால் மழை காலங்களில் மழை நீரானது சாலைகளில் தேங்குகிறது.

எனவே, ஒவ்வொரு வீடுகளிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை சீர் செய்து மழை நீரை முழுமையாக சேமிக்க வேண்டும். மேலும், கட்டமைப்புகளை அடிக்கடி சரிபார்த்து மழைநீரை சேகரிப்பதால் மழைநீரை நிலத்தடிக்கு செலுத்தி பூமியின் நீர்மட்டம் உயர ஏதுவாக அமையும். பொதுமக்கள் அனைவரும் மழைநீர் சேகரிக்கும் இந்த திட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து மாநகராட்சி ஆணையாளர் தெரிவிக்கையில், கோயம்புத்தூர் மாநகராட்சியின் சார்பில் மழைநீர் சேகரிப்பதன் அவசியம் மற்றும் பயன்கள் தொடர்பாக, மழைநீர் சேகரிப்பு கருத்தரங்க கூட்டம் இன்றைய தினம் (01.06.2024) சிறப்பாக நடைபெற்றது. இக்கூட்டத்தின் நோக்கம் கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள வீடுகள், வணிக வளாகங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் மழைநீர் கட்டமைப்புகளை முழுமையாக செயல்படுத்த வேண்டும்.

அவ்வாறு மழைநீரை நிலத்தடிக்கு செலுத்தி பூமியின் நீர்மட்டம் பெருமளவு உயரும். அதேபோன்று ஆழ்துளை கிணறுகளுக்கும் தண்ணீர் கிடைக்கப்பெறும். இதனால் மக்களின் குடிநீர் தேவையினை சீர் செய்ய முடிகிறது. மேலும் மாநகராட்சி பகுதிகளில் புதிய கட்டிட வரைபட அனுமதியின் போது அனைத்து கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மழை நீரை முழுமையாக சேமிக்கும் வகையில் கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அமைந்துள்ள கிருஷ்ணாம்பதி குளம், செல்வம்பதி குளம், குமாரசாமி குளம், செல்வசிந்தாமணி குளம், பெரியகுளம், வாலாங்குளம் மற்றும் குறிச்சி குளம் ஆகிய 7 குளங்கள் புனரமைக்கப்பட்டு மழைநீர் சேகரிப்பு செய்யப்பட்டுள்ளது.

அதே போன்று நரசிம்மபதி உருமாண்டம்பாளையம் மற்றும் சின்ன வேடம்பட்டி ஆகிய குளங்கள் புனரமைக்கப்பட்டு வருகின்றது என்பதை தெரிவித்துக்கொள்வதோடு, இங்கு நடைபெறும் கருத்தரங்கில் பொதுப்பணித்துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் உள்ளிட்ட பல்வேறு சார்பில் சிறந்த வல்லுநர்கள் மூலமாக மழைநீர் சேகரிப்பு தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று நவீன தொழில்நுட்பத்திலான மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் தொடர்பாகவும், கருத்துக்காட்சிகளும் அமைக்கப்பட்டுள்ளது. இதனை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு மழைநீர் சேகரிப்பதற்கான நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்தார்.

தொடர்ந்து, இக்கருத்தரங்கில் மழைநீர் சேகரிப்பதன் அவசியம் குறித்து பல்வேறு சிறந்த வல்லுநர்கள் மூலமாக விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.



முன்னதாக, மழைநீர் சேகரிப்புக்கான அவசியம் குறித்து அறிந்திடும் வகையில் அமைக்கப்பட்டிருந்த கருத்து காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர், மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.



இக்கூட்டத்தில், உதவி ஆட்சியர் (பயிற்சி) அங்கித் குமார் ஜெயின், மாநகர தலைமைப் அன்பழகன், செயற்பொறியாளர்கள் முருகேசன், கருப்பசாமி, உதவி ஆணையர்கள், உதவி செயற்பொறியாளர்கள், உதவிப் பொறியாளர்கள் உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.



Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...