சீமான் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு - பாஜக நிர்வாகி மீது கோவை போலீஸ் கமிஷனரிடம் நாம் தமிழர் கட்சியினர் புகார்

நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல் சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பி வரும், பாஜகவை சேர்ந்த திருச்சி சூர்யா மீதும், அவரை கண்டிக்காத மாநில தலைவர் அண்ணாமலை மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மனு அளித்தனர்.


கோவை: நாம் தமிழர் கட்சி கோவை மண்டல செயலாளர் அப்துல் வஹாப் மற்றும் நிர்வாகிகள் இன்று ஜூன்.1 கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது அவர்கள் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனை சந்தித்து ஒரு மனு அளித்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது, நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் துரைமுருகன், சாட்டை என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். இவரின் வளர்ச்சியையும், நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியையும் பொறுத்துக் கொள்ள முடியாத பாஜகவை சேர்ந்த திருச்சி சூர்யா சமூக வலைதளத்தில் சாட்டை துரைமுருகன் மற்றும் அவரது குடும்பத்தில் உள்ள பெண்கள், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் குறித்து அவதூறு பரப்பி வருகிறார்.

அவரை கண்டிக்காமல் மாநில தலைவர் அண்ணாமலை ஊக்கப்படுத்தி வருகிறார். எனவே, திருச்சி சூர்யா, மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...