கோவை செங்கத்துறை அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது - 2 கிலோ கஞ்சா பறிமுதல்

செங்கத்துறை பகுதியில் கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு வந்த திருப்பூரை சேர்ந்த பிரவீன்(21), பீகார் மாநிலத்தை சேர்ந்த அக்‌ஷய் குமார்(28) ஆகியோரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 2 கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


கோவை: போதைப்பொருள் இல்லா கோவையை உருவாக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதனடிப்படையில் நேற்று மே.31 சூலூர் காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனைக்கு கொண்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்படி, சூலூர் போலீசார் செங்கத்துறை நால்ரோடு சந்திப்பு பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது கஞ்சா விற்பனைக்கு கொண்டு வந்த திருப்பூரை சேர்ந்த பிரவீன்(21) மற்றும் பீகார் மாநிலத்தை சேர்ந்த அக்‌ஷய் குமார்(28) ஆகியோரை கைது செய்தனர்.



பின்னர் அவர்களிடமிருந்து 2 கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...