கோவை வரதராஜபுரம் சாய்விவாகா மகாலில் திமுக நிர்வாகிகள் கலந்தாலோசனைக் கூட்டம்

ஜூன் 4ம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கையின்போது, தலைமை முகவர் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து திமுக நிர்வாகிகளுக்கு கூட்டத்தில் ஆலோசனை வழங்கப்பட்டது.


கோவை: திமுக கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில், இன்று ஜூன்.1 கோவை நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, மாவட்டச் செயலாளர்கள், திமுக கழக வேட்பாளர் கணபதி ராஜ்குமார், தலைமை முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கலந்தாலோசனைக் கூட்டம், கோவை வரதராஜபுரம் சாய்விவாகா மகாலில், கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக்‌ ex.எம்எல்ஏ., தலைமையில் நடைபெற்றது.



இந்த கூட்டத்தில் திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ, ஜூன்- 4 அன்று நடைபெற உள்ள, வாக்கு எண்ணிக்கையின்போது, தலைமை முகவர் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.



இக்கூட்டத்தில், கோவை வடக்கு மாவட்டச் செயலாளர் தொ.அ.ரவி, திமுக கழக வேட்பாளர் கணபதி ராஜ்குமார், திருப்பூர் வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் குமார், தலைமை முகவர், கோவை நாடாளுமன்ற தொகுதிக்கு ‌‌உட்பட்ட கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதி, கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி, கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி, சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி, சூலூர் சட்டமன்றத் தொகுதி, பல்லடம் சட்டமன்றத் தொகுதி ஆகிய தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...