கோவை மருதமலையில் இருந்த யானை உடல்நலம் தேறியதால் வனப்பகுதிக்குள் விடப்பட்டது

பெண் யானைக்கு தற்போது உடல் நிலை தேறியதால், அது வனப்பகுதிக்குள் விடுவிக்கப்பட்டது. உயிரிழக்கும் நிலையில் இருந்த யானைக்கு சிகிச்சை அளித்த வனத்துறையினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.


Coimbatore: கோவை மருதமலை அருகே கடந்த சில தினங்களுக்கு முன்பு பெண் யானை ஒன்று நோய்வாய்ப்பட்ட நிலையில் கண்டறியப்பட்டது. அந்த யானையுடன் நான்கு மாத ஆண் குட்டி யானையும் இருந்தது. தொடர்ந்து அந்த யானைக்கு வனத்துறையின் மருத்துவக்குழுவினர் தொடர் சிகிச்சை அளித்து வந்தனர்.



யானையை கிரேன் வாகனத்தின் உதவியுடன் தூக்கி நிறுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. யானைக்கு சத்து மாத்திரைகளை புளி வெல்லம் ஆகியவற்றுடன் இடித்து அரிசி சோற்றில் வைத்து உணவும்வழங்கப்பட்டது.



இதனிடையே, பெண் யானைக்கு தற்போது ஜூன்.3 உடல் நிலை தேறியதால், கிரேன் ரோப்புகள் கழற்றி வனப்பகுதிக்குள் விடுவிக்கப்பட்டது. இதை அடுத்து பெண் காட்டு யானையின் செயல்பாடுகளை வனத் துறையினர் கண்காணிக்க பின் தொடர்ந்து வருகின்றனர்.

உயிரிழக்கும் நிலையில் இருந்த யானைக்கு சிகிச்சை அளித்த வனத்துறையினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...