பீளமேடு அண்ணா நகர் இல்ல வளாகத்தில் கலைஞரின் படத்திற்கு திமுக மாவட்டச் செயலாளர் நா.கார்த்திக் மரியாதை

கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பீளமேடு அண்ணா நகர் இல்ல வளாகத்தில், கலைஞரின் திருவுருவப் படத்திற்கு கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.


கோவை: கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் ex.எம்எல்ஏ., பீளமேடு அண்ணா நகர் இல்ல வளாகத்தில், முத்தமிழறிஞர், செம்மொழிக்காவலர், தலைவர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, முத்தமிழறிஞர் செம்மொழிக் காவலர் தலைவர் கலைஞரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி, மற்றும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று ஜூன்.3 நடைபெற்றது.



கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் ex.எம்எல்ஏ. பங்கேற்று முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் திருவுருவப் படத்திற்கு, மலர்தூவி,புகழ் வணக்கம் செலுத்தினார். பின்னர் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.



கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், கலைஞரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில், திமுக கழக தலைமை செயற்குழு உறுப்பினர் வே.பாலசுப்பிரமணியன், திமுக கழக பொதுக்குழு உறுப்பினர் ஆர்.மணிகண்டன், பீளமேடு பகுதி-1 திமுக செயலாளர் துரை.செந்தமிழ்செல்வன், 52 வது வார்டு செயலாளர் கி.நாராயணன், கோவை மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ராஜாமணி, 52 வது வார்டு அவைத்தலைவர் பொ.கோவிந்தராஜ், சுந்தர்ராஜன், சி.டி.சி.நடராஜ், எஸ்.ரங்கதுரை, பாலச்சந்திரன், வார்டு பிரதிநிதி ஆட்டோ வாசு, கிரீன்வே சுப்பிரமணியம், மனோகரன், அருள்மிகு ஸ்ரீ‌ கோனியம்மன் திருக்கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் வி.ஆர்.வெங்கடேஷ், கோகுல், கங்கை ரவி, கழக நிர்வாகிகள், கழக உடன்பிறப்புக்கள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...