சோமையம்பாளையத்தில் வீட்டுக்குள் புகுந்து செல்போன் திருடிய 2 பேர் கைது

சம்சாத் என்பவரின் வீட்டில் புகுந்து செல்போனை திருடிச்சென்ற கவுண்டம்பாளையம் காமராஜ் நகரை சேர்ந்த ஸ்ரீதர்(19), இடையர்பாளையம் டிவிஎஸ் நகரை சேர்ந்த ஆகாஷ்(23) ஆகிய இரண்டு பேரையும் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


கோவை: வடவள்ளி அருகே உள்ள சோமையம்பாளையத்தில் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் சம்சாத்(21) என்பவர் தங்கி அங்குள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.நேற்று முன்தினம் சம்சாத் வீட்டில் செல்போனை சார்ஜ் போட்டிருந்தார்.

அப்போது நைசாக உள்ளே நுழைந்த 2 பேர் அவரது செல்போனை திருடி சென்றனர்.இதனால் அதிர்ச்சியடைந்த சம்சாத் இது குறித்து வடவள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

அதில், செல்போனை திருடியது கவுண்டம்பாளையம் காமராஜ் நகரை சேர்ந்த தனியார் ஊழியர்கள் ஸ்ரீதர்(19), இடையர்பாளையம் டிவிஎஸ் நகரை சேர்ந்த ஆகாஷ்(23) என்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் இருவரையும் நேற்று ஜூன்.2 கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...