வால்பாறையில் கலைஞரின் பிறந்தநாள் விழா நகரச்செயலாளர் சுதாகர் தலைமையில் கொண்டாட்டம்

டாக்டர் கலைஞரின் 101 வது பிறந்த நாள் விழா நகரச்செயலாளர் சுதாகர் தலைமையில் கொண்டாடப்பட்டது. இதில் பங்கேற்ற பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் டிப்பன் பாக்ஸ் வழங்கப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் டாக்டர் கலைஞரின் 101 வது பிறந்த தினத்தை முன்னிட்டு நகரச்செயலாளர் குட்டி என்ற சுதாகர் தலைமையில் நிர்வாகிகள் வால்பாறையில் உள்ள காந்தி சிலை பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த கலைஞரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.



அதைத்தொடர்ந்து அனைவருக்கும் இனிப்பு மற்றும் டிப்பன் பாக்ஸ் வழங்கப்பட்டது.



பின்பு வால்பாறை 4 வது வார்டு பகுதியில் உள்ள அப்பகுதி நகர் மன்ற உறுப்பினரும், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளருமான ஜே.பி.ஆர்.என்ற ஜே.பாஸ்கர் ஏற்பாடு செய்திருந்த விழாவில் நகரச்செயலாளர் குட்டி என்ற சுதாகர் பங்கேற்று கட்சிக் கொடியேற்றி வைத்து விழாவை சிறப்பித்தார்.



அதனைத்தொடர்ந்து, பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்பு மற்றும் டிப்பன் பாக்ஸ் வழங்கி விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.



இவ்விழாவில் தலைமை செயற்குழு உறுப்பினரும், முன்னாள் நகர்மன்ற தலைவருமான கோழிக்கடை ந.கணேசன், மாவட்ட துணைச்செயலாளர் ஈ.கா.பொன்னுச்சாமி, வழக்கறிஞர் த.பால்பாண்டி, நகர் மன்ற தலைவர் அழகு சுந்தரவள்ளி செல்வம், அவைத்தலைவர் செல்லமுத்து, நகர் மன்ற துணைத்தலைவர் த.ம.ச.செந்தில்குமார், நகர துணைச் செயலாளர், சரவணபாண்டியன்,10 வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் காமாட்சி கணேசன், நிர்வாகிகள் டென்சிங், செல்வி விஜய ராஜன், சூரிய பிரபா, ஐடி விங்க் ஜெயராமன் என்ற கிருஷ்ணமூர்த்தி, எஸ்.ஆர்.எஸ்.சுரேஷ், வெங்கடேஷ், மகேந்திரன், கார்த்திக், குட்டி என்ற தமிழ்செல்வன் மற்றும் நிர்வாகிகளும் தொண்டர்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...