கோவை நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை வெற்றி பெற பாஜகவினர் சிறப்பு பூஜை

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை வெற்றி பெற வேண்டும் என்று ராஜா அண்ணாமலை ரோட்டில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் பாஜகவினர் சிறப்பு பூஜை நடத்தினர்.


கோவை: தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர்அண்ணாமலையின் பிறந்த நாளை முன்னிட்டு கோவை சாய்பாபா காலனி 69 ஆவது வார்டில், ராஜா அண்ணாமலை ரோட்டில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் சிறப்பு யாகம் மற்றும் சிறப்பு பூஜையானது இன்று காலையில் மாவட்டத் தலைவர்ரமேஷ் குமார் முன்னிலையிலை நடைபெற்றது.



நாடாளுமன்றத் தேர்தலில் அண்ணாமலை கோவை தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டார். கடந்த ஏப்ரல் மாதம் 19ம்தேதி வாக்குப்பதிவு நடந்தது. இன்று வாக்கு எண்ணிக்கை காலை 8 மணியளவில் தொடங்கியது. இதனால் கோவையில் பாரதிய ஜனதா கட்சியை சார்ந்தவர்கள் அண்ணாமலை தேர்தலில் வெற்றி பெற சிறப்பு பூஜை நடத்தினர்.

இதில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த சிறப்பு பூஜையில் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...