கோவை கோட்டைமேடு பகுதியில் திமுகவினர் மட்டன் பிரியாணி வழங்கி கொண்டாட்டம்

திமுக வேட்பாளர் ராஜ்குமார் 28,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருவதால் திமுகவினர் உற்சாகமடைந்துள்ளனர். பொதுமக்களுக்கு மட்டன் பிரியாணி, லட்டு வழங்கி அவர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.


கோவை: நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதிக்கும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் 38 தொகுதிகளில் திமுக., முன்னிலை வகித்து வருகிறது. இதனை ஒட்டி தமிழகம் முழுவதும் திமுகவினர் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.



கோவையில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை, அதிமுக வேட்பாளர் ராமச்சந்திரனை விட திமுக வேட்பாளர் ராஜ்குமார் 28,000 மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.

இந்த நிலையில் கோவையில் திமுக மாநகர் மாவட்ட செயலாளர் கார்த்திக் தலைமையில் இன்று ஜூன்.4 திமுகவினர் காந்திபுரம் பேருந்து நிலையம் பகுதியில் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



கோட்டைமேடு பகுதியில் திமுகவினர் பொதுமக்களுக்கு மட்டன் பிரியாணி வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பிரியாணி வழங்கும் போது அருகில் ஆடுகளை நிறுத்தி வைத்திருந்தனர்.

கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் தலைமையில் திமுகவினர் பட்டாசு வெடித்து இன்று ஜூன்.4 கொண்டாடினர். பின்னர் பொதுமக்களுக்கும் பேருந்து நிலையத்தில் பஸ்ஸில் உள்ளவர்களுக்கும் லட்டு கொடுத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...