இடையர்பாளையம் மற்றும் கவுண்டம்பாளையம் பகுதிகளில் திடீர் மழை

இடையர்பாளையம் மற்றும் கவுண்டம்பாளையம் ஆகிய பகுதிகளில் இன்று திடீரென மழை பெய்து வருகிறது. இந்த கோடை மழை விவசாய பணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


கோவை: கோவை இடையர்பாளையம் பகுதியில் இன்று (ஜுன்.4) மழை பெய்து வருகின்றது. கடந்த ஒரு வாரமாக மழை பெய்யாத நிலையில் இன்று திடீரென கனமழை பெய்து வருகிறது. இதனால் கோடை மழையில் விவசாய பணிகளை மேற்கொள்ளலாம் என விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். சுமார் 1 மணி நேரமாக மழை பெய்து வருவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.

இதேபோல், கவுண்டம்பாளையம் பகுதியிலும் இன்று (ஜுன்.4) மிதமான மழை பெய்தது. கடந்த ஒரு வாரமாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டநிலையிலும் மழை பெய்யாமல் இருந்தது. இந்த நிலையில் இன்று திடீரென கரு மேகங்கள் சூழ்ந்து மழை பெய்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...