கோவையில் வாக்கு எண்ணும் மையத்திற்கு தலைகாட்டாத அண்ணாமலை..!

பா.ஜ.க. மாநில தலைவரும், கோவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை ஒரு சுற்று வாக்கு எண்ணிக்கையில் கூட முன்னிலை வகிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




கோவை: நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், கோவையில் 24 சுற்று வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்துள்ளது.

கோவையில் தடாகம் சாலையில் உள்ள அரசினர் பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இந்த மையத்தில் பல்வேறு கட்சி முகவர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் முகாமிட்டுள்ளனர்.

இவர்களோடு திமுக., அதிமுக.,வேட்பாளர்களான கணபதி ராஜ்குமார் மற்றும் சிங்கை ராமச்சந்திரன் ஆகியோர் இருந்தனர்.

ஆனால், காலையில் இருந்தே பா.ஜ.க. மாநில தலைவரும் கோவை தொகுதியின் வேட்பாளருமான அண்ணாமலை வரவில்லை. காலையில் இருந்து நடைபெற்ற ஒரு சுற்று வாக்கு எண்ணிக்கையில் கூட அண்ணாமலை முன்னிலை வகிக்கவில்லை. இதனால் அவர் கோவையில் இருந்துகொண்டே வாக்கு எண்ணும் மையத்தை எட்டிப்பார்க்கவில்லை என்று கட்சி தொண்டர்கள் தெரிவித்தனர். இது பா.ஜ.க. தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...