சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமாருக்கு அழைப்பு விடுப்பது குறித்து நாளை முடிவு – டெல்லியில் ராகுல்காந்தி பேட்டி

டெல்லியில் நாளை நடைபெறும் கூட்டத்தில் பா.ஜ.க. கூட்டணியில் உள்ள சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளுக்கு அழைப்பு விடுப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.


கோவை: டெல்லியில்ராகுல் காந்திசெய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியாதவது, அரசியல் சாசனத்தை காக்க மக்கள் எங்களுக்கு வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. பா.ஜ.க. மட்டுமின்றி சிபிஐ, அமலாக்கத்துறையை எதிர்த்து நின்று வென்றுள்ளோம்.

மக்கள் தீர்ப்பு அரசியல் சாசனத்தைக் காக்க உதவியிருக்கிறது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரல் ஒலிக்கும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது. பிரதமர் மோடியை மக்கள் புறக்கணித்துவிட்டனர். விவசாயிகள், ஏழைகள், பட்டியலின மக்கள்தான் அரசியல் சாசனத்தை காப்பாற்றியுள்ளனர்.

2 தொகுதிகளிலும் நான் வெற்றி பெற்றுள்ளேன். ரேபரேலி, வயநாடு தொகுதி மக்களுக்கு நன்றி. வயநாடு, ரேபரேலி தொகுதிகளில் எதை ராஜினாமா செய்வது என்று இன்னும் முடிவெடுக்கவில்லை. டெல்லியில் இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நாளை நடைபெற உள்ளது. நாங்கள் எங்கள் கூட்டணிக் கட்சிகளை மதிக்கிறோம், அவர்களைக் கேட்காமல் எந்த அறிக்கையும் வெளியிடமாட்டோம். நாளை நடைபெறும் கூட்டத்தில் பா.ஜ.க. கூட்டணியில் உள்ள சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளுக்கு அழைப்பு விடுப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...