கோவை நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் வெற்றி பெற்ற கணபதி ராஜ்குமார் கலைஞரின் படத்திற்கு மரியாதை

வடகோவை கிராஸ்கட் சாலையில் உள்ள கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த முத்தமிழறிஞர் செம்மொழிக் காவலர் கலைஞரின் திருவுருவப் படத்திற்கு நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் வெற்றி பெற்ற கணபதி ராஜ்குமார் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.


கோவை: கோவை நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் வெற்றி பெற்ற, கணபதி ராஜ்குமார் எம்பி., நேற்று 4-6-2024, செவ்வாய்க்கிழமை இரவு 11.00 மணியளவில், கோவை வடகோவை கிராஸ்கட் சாலையில் உள்ள, கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில் முத்தமிழறிஞர் செம்மொழிக் காவலர் கலைஞரின்திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.இராஜா முத்தமிழறிஞரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் ex.எம்எல்ஏ., முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.



உடன் கோவை வடக்கு மாவட்டச் செயலாளர் தொ.அ.ரவி, கோவை தெற்கு மாவட்டச் செயலாளர் தளபதி முருகேசன், கழக சொத்துப் பாதுகாப்பு குழு துணைத் தலைவர் பொங்கலூர் நா.பழனிச்சாமி, மாநகர் மாவட்ட துணைச் செயலாளர்கள் கோட்டை அப்பாஸ், கல்பனா செந்தில், மாநகர் மாவட்ட பொருளாளர் எஸ்.எம்.பி.முருகன், கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்த், தலைமைக் கழக நிர்வாகிகள் மகேந்திரன், அ.தமிழ்மறை, வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் அசோக் ஆறுக்குட்டி, தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் கனிமொழி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் டி.எஸ்.பி.கண்ணப்பன், ஆனந்தகுமார், காந்திபுரம் பகுதிச் செயலாளர் ‌ஆர்.எம்.சேதுராமன், அணிகளின் அமைப்பாளர்கள் ஆர்.கே.சுரேஷ்குமார், கோவை அபு, சிவராமன், கே.டி.தியாகராஜன், சி.வி.தீபா, அன்னம்மாள் ex.mc., வட்டக் கழகச் செயலாளர்கள் எஸ்.போஸ், கே.ராமநாதன், டவுன் பா.ஆனந்த், ஏ.எஸ்.நடராஜ், கழக நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...