மூளைச் சாவு அடைந்த திருப்பூர் தொழிலாளியின் உடல் உறுப்புகள் கோவை அரசு மருத்துவமனைக்கு தானம்

சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சுரேஷ்குமாரின் கண்கள் மற்றும் ஒரு சிறுநீரகம் கோவை அரசு மருத்துவமனைக்கும், கல்லீரல் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம் குமாரமங்கலம் அரசு மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டது.


கோவை: திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (31) திருமணமான இவர் திருப்பூரில் பணிபுரிந்து வருகிறார். இதனிடையே கடந்த 2ம் தேதி இவர் இருசக்கர வாகன விபத்தில் சிக்கினார். தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மூளைச்சாவு அடைந்தது உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அவரது குடும்பத்தாரின் சம்மதத்துடன் சுரேஷ்குமாரின் உடல் உறுப்புகளை தானமாக பெற மருத்துவர்கள் முடிவு செய்தனர். தொடர்ந்து மயக்கவியல் நிபுணர்கள் கல்யாண சுந்தரம், சண்முகவேல், நர்மதா ஆகியோர் தலைமையிலான குழுவினர் உறுப்பு தான சிகிச்சையை மேற்கொண்டனர்.

தொடர்ந்து சுரேஷ்குமாரின்கல்லீரல் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம் மற்றும் கண்கள் கோவை அரசு மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம் குமாரமங்கலம் அரசு மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டது.

உடல் உறுப்பு தானம் செய்த சுரேஷ்குமாரின் உடலுக்கு கோவை அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா மற்றும் மருத்துவ பணியாளர்கள் நேற்று ஜூன்.4 மரியாதை செலுத்தி திருப்பூர் அனுப்பி வைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...