நீலகிரி தொகுதியில் ஆ.ராசா வெற்றி – மேட்டுப்பாளையத்தில் திமுக வாடகை கார் ஓட்டுநர் சங்கம் சார்பில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட ஆ.ராசா வெற்றிபெற்றார். இதனையடுத்து மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் திமுக வாடகை கார் ஓட்டுநர் சங்கம் சார்பில் இன்று பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது.


கோவை: நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட ஆ.ராசா 2,40,585 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி பெற்றார். இதனையடுத்து நீலகிரி தொகுதியில் ஆ.ராசா மீண்டும் வெற்றி பெற்றதை தொடர்ந்து மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் திமுக வாடகை கார் ஓட்டுநர் சங்கம் சார்பில் இன்று ஜூன்.5 பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது. இதனைத்தொடர்ந்து கோஷமிட்டவாறு அங்கிருந்த பொதுமக்களுக்கு அவர்கள் இனிப்புகளை வழங்கினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...