உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கோவை காந்திபுரம் சிக்னலில் 500 மரக்கன்றுகள் வழங்கும் விழா

பொதுமக்கள் சுற்றுச்சூழல் குற்றங்கள் ஏற்படாதவாறு மரங்களை அதிக அளவில் வளர்த்து பாதுகாக்க வேண்டும் என்று கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் அறிவுரை வழங்கினார்.


கோவை: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கோவை மாநகர காவல் துறையும், ஊர்காவல் படையும் இணைந்து கோவை காந்திபுரம் சிக்னலில் 500 மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.



இதில், கோவை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் மற்றும் வடக்கு துணை ஆணையர் ஸ்டாலின் ஆகியோர் பங்ஏற்று பொதுமக்களுக்கு இன்று ஜூன்.5 மரக்கன்றுகளை வழங்கினர்.



மேலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மரக்கன்றுகள் குறித்து எடுத்துரைத்தார்.



இந்த நிகழ்ச்சியில் மக்களிடம் உரையாற்றிய கோவை மாநகர் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், தற்பொழுது குற்றங்களில் 2 வகை உள்ளது. ஒன்று கொள்ளை மற்றொன்று இணைய வழி குற்றம் என்று பொதுமக்களிடம் கூறினார்.

அடுத்த 50 ஆண்டுகளுக்குப் பிறகு சுற்றுச்சூழல் குற்றங்கள் ஏற்படும் என்று பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுவித்தார். மரங்கள் வளர்ப்பதினால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என்றும், தற்போது ஆக்ஸிஜன் பற்றாக்குறை இருப்பதால் காவல்துறையினர் பாதுகாப்போடு ஆக்சிஜன் கொண்டு செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

எனவே பொதுமக்கள் மரங்களை விழிப்புணர்வோடு வளர்த்தால் மட்டுமே சுற்றுச்சூழலுக்கு நன்மை ஏற்படும் என்று கூறினார். மரங்கள் வளர்ப்பது மூலம் அதிக அளவில் மழை பெய்யும் என்றும், சுற்றுச்சூழல் மாசடையாமல் ஆக்சிஜன் அதிகளவில் கிடைத்து பொதுமக்கள் சுத்தமான காற்றை சுவாசித்து வாழ முடியும் என்று கூறினார். பொதுமக்கள் சுற்றுச்சூழல் குற்றங்கள் ஏற்படாதவாறு மரங்களை வளர்த்து அதனை பாதுகாத்து அனைவருக்கும் நன்மை ஏற்படுத்தும் வகையில் மரங்களை அதிக அளவில் வளர்க்க வேண்டும் என்று பொது மக்களுக்கு அறிவுரை வழங்கினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...