தமிழ்நாட்டில் பாஜக போட்டியிட்ட 19 தொகுதிகளில் 10 தொகுதிகளில் டெபாசிட் இழப்பு

மக்களவை தொகுதி தேர்தலில் பாஜக 10 தொகுதிகளிலும், பாமக 6 தொகுதிகளிலும், தாமக 3 தொகுதிகளிலும், அமமுக ஒரு தொகுதியிலும், இஜக ஒரு தொகுதியிலும் டெபாசிட் இழந்துள்ளது.


கோவை: மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக மொத்தம் 19 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் 10 தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளது. இந்நிலையில், டெபாசிட் இழந்த வேட்பாளர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

வட சென்னையில் பால் கனகராஜ், சிதம்பரத்தில் கார்த்தியாயினி, கரூரில் செந்தில்நாதன், நாகப்பட்டினத்தில் ரமேஷ், நாமக்கல்லில் கே.பி.ராமலிங்கம், தஞ்சாவூரில் கருப்பு முருகானந்தம், திருப்பூரில் ஏ.பி.முருகானந்தம், திருவள்ளூரில் பொன் பாலகணபதி, திருவண்ணாமலையில் அஸ்வத்தாமன், விருதுநகரில் ராதிகா சரத்குமார் ஆகியோர் டெபாசிட் இழந்துள்ளனர்.

இதேபோல், பாஜக கூட்டணியில் 10 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக 6 தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளது. திண்டுக்கலில் போட்டியிட்ட திலகபாமா, கள்ளக்குறிச்சியில் போட்டியிட்ட தேவதாஸ், காஞ்சிபுரத்தில் போட்டியிட்ட ஜோதி, மயிலாடுதுறையில் போட்டியிட்ட ஸ்டாலின், சேலத்தில் போட்டியிட்ட அண்ணாதுரை, விழுப்புரத்தில் போட்டியிட்ட முரளிசங்கர் ஆகியோர் டெபாசிட் இழந்துள்ளனர்.

பாஜக கூட்டணியில் 3 தொகுதிகளில் போட்டியிட்ட தமாக 3 தொகுதிகளிலும் டெபாசிட் இழந்துள்ளது. ஈரோட்டில் விஜயகுமார், ஸ்ரீபெரும்புதூரில் வேணுகோபால், தூத்துக்குடியில் விஜயசீலன் ஆகியோர் டெபாசிட் இழந்துள்ளனர்.

பாஜக கூட்டணியில் 2 தொகுதிகளில் போட்டியிட்ட அமமுக 1 தொகுதியில் டெபாசிட் இழந்துள்ளது. திருச்சியில் செந்தில்நாதன் டெபாசிட் இழந்துள்ளார். பாஜக கூட்டணியில் 1 தொகுதியில் போட்டியிட்ட இஜக டெபாசிட் இழந்தது. பெரம்பலூரில் போட்டியிட்ட பாரிவேந்தர் டெபாசிட் இழந்துள்ளார்.

தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 மக்களவை தொகுதிகளில் போட்டியிட்ட “பாஜக கூட்டணி - NDA” மொத்தமாக 21 தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...