அகில இந்திய கூடைப்பந்து போட்டி; சென்னை - வருமானவரி அணி, கேரளா மாநில மின்சார வாரிய அணி வெற்றி

முதல் நாள் போட்டியில் ஆண்கள் பிரிவில் சென்னை - வருமானவரி அணி, கேரளா மாநில மின்சார வாரிய அணி, பெண்கள் பிரிவில் கேரளா மாநில மின்சார வாரியம், கிழக்கு ரயில்வே, தென் மத்திய ரயில்வே அணிகள் வெற்றி



Coimbatore: அகில இந்திய கூடைப்பந்து போட்டி கோவையில் நேற்று மாலை 4.00 மணிக்கு துவங்கியது.

இதில் 57-வது நாச்சிமுத்து கவுண்டர் கோப்பை ஆடவர் பிரிவில் முதல் நாள் மாலை 5.30 மணிக்கு நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை - வருமான வரி அணியை எதிர்த்து கோயம்புத்தூர் - கோவை மாவட்ட கூடைபந்து கழக அணி விளையாடியது, இதில் வருமான வரி அணி 88 - 75 என்ற புள்ளி கணக்கில் வென்றது.



இரவு 7.00 மணிக்கு நடைபெற்ற இரண்டாவது போட்டியில் திருவனந்தபுரம் - கேரளா மாநில மின்சார வாரிய அணியை எதிர்த்து புதுடெல்லி - மத்திய செயலக அணி விளையாடியது. இதில் கேரளா மாநில மின்சார வாரிய அணி 64 - 55 என்ற புள்ளி கணக்கில் வென்றது.

21 வது சிஆர்ஐ பம்ப்ஸ் கோப்பைக்கான மகளிர் பிரிவு முதல் நாள் மாலை 4.00 மணிக்கு நடைபெற்ற முதல் போட்டியில் திருவனந்தபுரம் - கேரளா மாநிலம் மின்சார வாரிய அணியை எதிர்த்து கோயம்புத்தூர் - கோவை மாவட்ட கூடைப்பந்து கழக அணி விளையாடியது. இதில் கேரளா மாநிலம் மின்சார வாரிய அணி 99 - 42 என்ற புள்ளி கணக்கில் வென்றது.



மாலை 5.30 மணிக்கு நடைபெற்ற இரண்டாவது போட்டியில் கொல்கத்தா - கிழக்கு ரயில்வே அணியை எதிர்த்து சென்னை - ரைசிங் ஸ்டார் அணி விளையாடியது. இதில் 81 - 71 என்ற புள்ளி கணக்கில் கிழக்கு ரயில்வே அணி வென்றது.

இரவு 7.00 மணிக்கு நடைபெற்ற மூன்றாவது போட்டியில் செகந்திராபாத் - தென் மத்திய ரயில்வே அணியை எதிர்த்து மும்பை - மேற்கு ரயில்வே அணி விளையாடியது. இதில் 80 - 45 என்ற புள்ளி கணக்கில் தென் மத்திய ரயில்வே அணி வென்றது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...