உடுமலை, மடத்துக்குளத்தில் கனமழை - குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்கள் அவதி

உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதியில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்ததால் மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதி கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. இந்த நிலையில் இன்று காலை முதல் இப்பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் தற்போது இடைவிடாமல் கனமழை பெய்து வருகின்றது. இதனால் கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் புகுந்ததால் பொதுமக்களும் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர்.



பொதுமக்கள் கூறும் பொழுது, தற்பொழுது மடத்துக்குளம் பகுதியில் இடைவிடாமல் கன மழை பெய்து வருகின்றது. கோவை-திண்டுக்கல் தேசிய பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் மற்றும் விரிவு படுத்தாத நிலையில் தற்போது குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் புகுந்துள்ளது. சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மடத்துக்குளம் பேரூராட்சி நிர்வாகத்திற்கும், நெடுஞ்சாலை துறைக்கும் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர்கள் புகார் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...