கோவை எஸ்.ஐ.ஹெச்.எஸ்.காலனி ரயில்நிலையம் அருகில் குடிநீர் குழாய் அமைக்கும் பணி – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

எஸ்.ஐ.ஹெச்.எஸ்.காலனி ரயில்நிலையம் அருகில் சூயஸ் நிறுவனத்தின் மூலம் குடிநீர் குழாய் அமைக்கும் பணிகளையும், ஒண்டிப்புதூர், திருச்சி சாலையில் நடைபெறும் குடிநீர் திட்டப்பணிகளையும் மாநகராட்சி ஆணையாளர் சிவகுருபிரபாகரன் ஆய்வு செய்தார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம், வார்டு எண்.55க்குட்பட்ட சிங்காநல்லூர், நேதாஜிபுரம், எஸ்.ஐ.ஹெச்.எஸ்.காலனி ரயில்நிலையம் அருகில் சூயஸ் நிறுவனத்தின் மூலம் 24X7 குடிநீர் திட்டப்பணிகளின் கீழ் பிரதான குடிநீர் குழாய் அமைக்கும் பணி நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இன்று (06.06.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



இதேபோல், கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம், வார்டு எண்.58க்குட்பட்ட ஒண்டிப்புதூர், திருச்சி சாலையில் சூயஸ் நிறுவனத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டுவரும் 24X7 குடிநீர் திட்டப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இன்று (06.06.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

உடன் மாநகர தலைமைப் பொறியாளர் அன்பழகன், உதவி ஆணையர் கவிதா, உதவி செயற்பொறியாளர் ஹேமலதா, உதவி பொறியாளர்கள், சூயஸ் நிறுவன அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...